சிவகார்த்திகேயன்: என்னை நானே வெகுவாக ரசித்தேன்

பெண் கதாபாத்திரத்தில் தம்மைத் தாமே வெகு வாக ரசித்ததாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இதுவரை நடித்த படங்களிலேயே 'ரெமோ' தான் மிக முக்கியமான படம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். "முதலில் நானே இந்தப் படத்தை தயாரிக்கலாம் என்றுதான் முடிவு செய்தேன். பிறகுதான் என் நண்பர் ஆர்.டி.ராஜா முன்வந்தார். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. இருவருமே ஒரே அலைவரிசை யில்தான் சிந்திப்போம். "சமயங்களில் நான் சொல்ல நினைப்பதை அவர் எனக்கு முன்பே சொல்லியதை கேட்டிருக்கிறேன். எனது நல்லது கெட்டது களில் தொடர்ந்து பங்கெடுப்பவர். அவர் இந்தப் படத்தை தயாரிப் பதில் மிகவும் மகிழ்ச்சி.

'ரெமோ'வின் கதைக் களம்?

"ரொம்ப கனமான கதை என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு பெண்ணை இளம் நாயகன் துரத்தித் துரத்திக் காதலிக்கிற கதைதான். அதில் இந்தப் பெண் வேட மிடும் கதாபாத்திரம் சற்று பெரிதாக இடம்பெறுகிறது. அது சந்தேகம் இல் லாமல் அமைய வேண்டும். ரசிகர் கள் அதைப் பார்த்து வெறுமனே சிரித்துவிட்டுப் போய்விடக் கூடாது அதனால் சில நடை, உடை பாவனைகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறோம். "கிராமத்து பின்ன ணியில் 'ரஜினி முருகன்' படத்தில் நடித்த பிறகு, இப்படியொரு படம், வேடம் அமைந்தது நல்ல விஷயமாகப் படுகி றது. இது மகிழ்ச்சி தரும் படமாகவும், சிரிக்கக்கூடிய படமாகவும், ஏதாவது இரண்டு இடத்தில் நெகிழ்ச்சி யாக கண்ணீரை ஒற்றியெடுக் கிற மாதிரியும் இருக்கும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!