‘நெருப்புடா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

விக்ரம் பிரபு நடிக்கும் 'நெருப் புடா' படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. தற்போது 'வீர சிவாஜி' படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம் பிரபு. இதில் அவரது ஜோடியாக ஷாம்லி நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'கபாலி' படத்தில் இடம் பெற்றுள்ள 'நெருப்புடா' பாடலின் முதல் வார்த்தையையே தனது அடுத்த படத்தின் தலைப் பாக வைத்துள்ளார் விக்ரம் பிரபு. இந்தப் படத்தின் பூசை அண்மையில் சென்னையில் சிவாஜியின் அன்னை இல்லத்தில் பிரமாண்டமாக நடந்தது.

இப்படத்தின் பூஜையின் போதே விக்ரம் பிரபு, தனது புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்தப் படத்தை விக்ரம் பிரபு தயாரிக்கவும் செய்கிறார். இந்தத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் படப்பூஜையில் திரையு லக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு விக்ரம் பிரபுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில், 'நெருப்புடா' படத்தின் படப்பிடிப்பை நேற்று சென்னையில் அப்படக்குழுவினர் உற்சாகமாகத் தொடங்கியுள்ளனர்.

கண்ணகி நகரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராகவும் ரஜினி ரசிகராகவும் நடிக்கிறார். அவ ருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். அசோக் குமார் இயக்குகிறார். "இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகிறது. விக்ரம் பிரவுக்கு இது நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்," என்று நம்பிக்கையூட்டுகிறார் இயக்குநர் அசோக்குமார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!