கார்த்தி, விஷாலை இயக்கும் முத்தையா

நடிகர் சங்கத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டிய பிறகே தனது திருமணம் என்ற குறிக்கோளுடன் ஓடிக் கொண்டிருக்கிறார் நடிகர் விஷால். திருமணத்துக்காக வீட்டில் பெற்றோர் வற்புறுத்திக் கொண்டி ருக்கும் இக்கட்டான சூழ்நிலை யில், நாலாபுறத்திலும் தன் முயற்சியை நீட்டித்திருக்கிறார். நடிகர் சங்கத்திற்கு சொந்த மான இடம் செங்கல்பட்டு பகுதியில் இருக்கிறதாம். அதை நல்ல விலைக்கு விற்றுவிட்டால், சொந்தக் கட்டடம் கட்டுவதற்குத் தேவைப்படும் தொகையில் கணி சமான ஒரு பங்கை திரட்டலாமே எனும் யோசனையில் உள்ளாராம்.

இதற்கிடையில் இவரும், கார்த்தியும் இணைந்து ஒரு படத்தில் நடித்து, அதை நல்ல விலைக்கு விற்று, அதன் மூலம் வருகிற லாபத்தை நடிகர் சங்கத் துக்கு தரும் திட்டம் ஒன்று இருக்கிறதல்லவா?

அது இப்போது நல்ல வேகத்தை எட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஷாலும், அதற்கு குறையாமல் வாங்கும் கார்த்தியும் இந்தப் படத்தில் இலவசமாக நடிக்க இருக்கிறார்கள்.

சரி, இந்தப் படத்தை இயக்கப் போவது யார்? என்ற கேள்வி எழுவது இயல்புதானே? "மூன்று இயக்குநர்களை வர வழைத்துக் கதை கேட்டோம். ஒருவரை முடிவு செய்திருக்கிறோம். அவர் யாரென்பதை பிறகு சொல் கிறோம்," என்று கூறியிருந்தார் விஷால். அவர் சொன்ன இயக்குநர் வேறு யாருமல்ல, 'கொம்பன்' முத்தையாதானாம்.

'கொம்பன்' படத்தில் கார்த்தி, லட்சுமி மேனன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!