சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

இயக்குநர் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் இசையமைப்பாளர் சத்யராஜுடன் இணைந்து புதிய கூட் டணி ஒன்றை அமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். 'டார்லிங்-2' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அவர், கடந்த இரண்டு வருடங்களில் நான்கு படங் களில் நடித்துள்ளார். இப்போது 'புரூஸ்லி', 'கடவுள் இருக்கான் குமாரு' படங்களில் நடித்து வருகிறார். வேறு 2 படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் ஜி.வி.பிரகாஷ். இது அவரது எட்டாவது படமாகும். சண்முகம் முத்துசாமி இயக்குநராக அறிமுகம் ஆகும் இந்தப் படத்தில் ஜி.வி.பிரகா‌ஷுடன் சத்யராஜ் இணைகி றார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், ஆர்.ஜே.விஜய் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். பிகே வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். நாயகி தேர்வு நடந்து வருகிறது. இந்தப் படத்தின் தொடக்க விழா அண்மையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் எம்.எஸ்.சரவணன், ஷாம், பிரசன்னா, ராம்கி, நிரோஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே, இசையமைப்பாள ராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ், தற்போது இயக்குநராகவும் மாறி இருக்கிறார். விஷயம் இதுதான். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் ஜி.வி.பிரகாஷ் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

மேலும் படத்திற்குள் படம் எடுப்பது போலவும், அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிகை கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன. மேலும் இந்தப் படத்தில் நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சிங்கம்புலி, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக் கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்ற கதாபாத்திரங்களை விட இயக்குநர் வேடத்தில் நடிப்பது வித்தியாசமான அனுபவங்களைத் தருவதாகச் சொல்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்தப் படத்தின் கதை ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!