முற்றுப்புள்ளி வைத்த புகைப்படங்கள்

ரஜினி ஓய்வு எடுப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் கூறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ரஜினி அமெரிக்காவுக்கு ஓய்வெடுப்பதற்காகச் சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அவர் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது பற்றிய எந்த செய்திகளும் இதுவரை வெளிவரவில்லை. அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் இதை மறுத்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் ஆசிரமம் ஒன்றுக்கு ரஜினி தனது மகள் ஐஸ்வர்யா தனு‌ஷுடன் சென்று வழிபட்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. மேலும், ஆசிரமத்தைச் சேர்ந்த ஒருவருடன் ரஜினி சிரித்தபடி உரையாடுவது போலவும் ஒரு புகைப்படம் வெளியாகியுள் ளது. இந்த புகைப்படங்கள் எல்லாம் ரஜினியின் உடல்நிலை குறித்து மறுபடியும் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!