பெண்களுக்கு இயக்குநர் அறிவுரை

பெண் சமூகத்தின் சுதந்திரத்தை ஆண்களிடம் தேடாதீர்கள் என்றும் அந்தச் சுதந்திரம் பெண்களிடம்தான் உள்ளது என்றும் கூறுகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். பெண்ணியத்துக்கு முக்கியத்து வம் கொடுத்து உருவாக்கப்பட்ட 'இறைவி' திரைப்படத்துக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக மகளிரணி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அவர், தாம் இயக்கிய படங்களிலேயே முதல் முறையாக இந்தப் படத்துக்குத்தான் பாராட்டு விழா நடப்பதாகக் குறிப்பிட்டார்.

"இப்படம் பெரிய வருமானத்தைக் கொடுக்கவில்லை என்றாலும் அந்த வருத்தம் இப்போது இல்லை. இனி மேல் இதுபோன்ற படத்தை எடுக்க வேண்டாம் என பலரும் அறிவுரை கூறினார்கள். "படத்தின் வசனங்கள் வெளிப் படையாக இருந்ததால் தணிக்கை யில் பல கேள்விகள் எழுந்தன. அந்த வருத்தமும் இன்று தீர்ந்து விட்டது. நான் பார்த்த, என்னைப் பாதித்த பெண்களே கதைக்களமாக அமைந்தனர். "நமது பெண்கள் சகிப்புத்தன் மையின் உதாரணங்கள். தாங் களே சரணடைந்து, தங்களை ஆளும் உரிமையை ஆண்களுக்கு கொடுப்பதே பெண்கள்தான். பெண் சுதந்திரத்தை ஆண்களிடம் தேடாதீர்கள். அது பெண்களிடம் தான் இருக்கிறது.

"எப்போதோ வாழ்ந்த சில பெண்கள்தான் இப்போதும் இறைவிகளாக வழிபடப்படுகிறார் கள். வாழும்போது அவர்களை நாம் போற்றுவதில்லை," என்றார் கார்த்திக் சுப்புராஜ். நடிகர் விஜய் சேதுபதி பேசும் போது, இறைவியில் கூறப்பட்ட கருத்தை உள்வாங்கிக் கொண்ட வர்கள் இருக்கிறார்கள் என் பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சி யாக இருக்கிறது என்றார். "அன்பையும், புரிதலையும் மையமாகக் கொண்ட வாழ்க் கையைப் பெண்கள் எளிதில் உணர்கிறார்கள்," என்றார் விஜய் சேதுபதி.

'இறைவி' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!