சிபிராஜ் படத்தில் நடித்த வாஸ்து மீன்

நாய், நரி, பூனை, புலிக்குட்டி என நடிப்பதற்குத் தயாராக இருக்கும் விலங்குகளில் பாம்புக்கு மட்டும் தான் தமிழ்த் திரையுலகில் எப்போதுமே அதிகப்படியான வரவேற்பு கிடைக்கிறது. அதிலும் ஆடி மாதம் வந்து விட்டால், அந்தச் சமயத்தில் வெளியிடுவதற்கென்றே பாம்புகளை முன்னிலைப்படுத்தி சில படங்கள் தயாராகும். அத்தகைய படங்கள் முதலீடு செய்ததைவிட தயாரிப்பாளருக்குப் பல மடங்கு லாபத்தை திருப்பிக் கொடுத்ததை யாரும் மறந்துவிட முடியாது. இதனால்தான் ரஜினி படத்திலேயே தலை காட்டுகிற அளவுக்கு உயர்ந்தது பாம்புகளின் மதிப்பு. இப்போது வாஸ்து மீன்க ளுக்குப் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறதாம்.

'கட்டப்பாவை காணோம்' என்ற பெயரில் விரைவில் வரப் போகும் படத்தில், கதாநாயகனாக நடித்துள்ளார் சிபிராஜ். இப்படத் தில் வாஸ்து மீன் ஒன்றும் அவருடன் பல காட்சிகளில் தோன்றுமாம். மீனோடு நடித்ததை முகமெல் லாம் பொங்கி வழியும் பூரிப்புடன் அவர் தனக்கு நெருக்கமான வர்களிடம் விவரித்து வருகிறார். இப்படத்தின் இயக்குநர் மணி செய்யோன், 'ஈரம்' அறிவழ கனிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர். "இப்படத்தின் கதையை சிபி ராஜிடம் சொல்லி அவர் நடிக்க சம்மதித்த உடன், நாங்கள் செய்த முதல் வேலை வாஸ்து மீன் ஒன்றை வரவழைத்ததுதான். பிறகு அதற்குப் பயிற்சி அளித்தோம்.

"மீன் தொட்டிக்கு அருகே நின்று இந்தப்பக்கம் வா என்று விரலை நீட்டினால் அந்தப் பக்கம் வருகிற அளவுக்கு அதை முத லில் பழக்கினோம். சில சமயங் களில் நாம் அழைக்கும்போது வராது. அதனால், நம் சொல் பேச்சைக் கேட்கும்வரை வச னத்தை திரும்பத் திரும்பச் சொல்வோம். அந்த வகையில் சிபிராஜ் அம்மீனுடன் நடிக்க ரொம்பவே சிரமப்பட்டுள்ளார்," என்கிறார் மணி செய்யோன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!