65 வயதிலும் இளமைத் தாண்டவம் - ரஜினி ரகசியம்

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ரஜினியை நேசிப்பது மட்டுமில்லை, 'தலைவா' எனத் தொழவும் செய்கின்றனர். ரஜினியின் படங்கள் மிகப் பெரிய வெற்றிப் படங்களாக மட்டும் அமையாமல் வெளிநாடுகளிலும்கூட வசூலை வாரிக் குவித்து வருகின்றன. இவரது படங்கள் வெளியாகும் நாள், ரசிகர்களுக்குக் கொண்டாட்டமான நாள். பட்டாசு வெடிப்பது, தேங்காய் உடைப்பது, திரையரங்குகளில் பூஜை செய்வது, 'கட்-அவுட்'களுக்குப் பாலாபிஷேகம் செய்வது என ரசிகர்களின் ஆரவாரம் சொல்லி மாளாது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள நியூ நீலா பவன் எனும் உணவகம் ரஜினியின் 62வது பிறந்தநாளன்று ராஜாதி ராஜா தோசை, தளபதி பரோட்டா, அதிசய பிறவி இட்லி, படையப்பா சுருட்டு பரோட்டா, எந்திரன் நூடல்ஸ், மாப்பிள்ளை ஜிகர்தண்டா என 12 புதுவகை உணவுகளை அறிமுகப்படுத்தி அசத்தியது. 'கிங் ஆஃப் ஸ்டைல்' என அழைக்கப்படும் ரஜினிக்கு 65 வயது ஆனபோதும் அவரது இளமைத் தோற்றம் அப்படியே தான் இருக்கிறது. கடுமையான உணவுக் கட்டுப்பாடும் தியானமும்தான் தம்மை இளமையாக வைத்திருப்பதாக சில ஆண்டுகளுக்குமுன் ரஜினியே கூறியிருந்தார்.

சர்க்கரை, அரிசி, பால், தயிர், நெய் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டாலே, குறிப்பாக 40 வயதிற்கு மேல் இவற்றை உணவில் சேர்க்காமல் இருந்தாலே போதும், முதுமை ஒருவரை விரைவில் அண்டாது என்கிறார் ரஜினி. அன்றாடம் காலை 5 மணிக்கு எழுந்திருக்கும் இவர், பின்னர் ஒரு மணி நேரம் மெதுவோட்டம் செய்கிறார். மாலையில் கண்டிப்பாக நடைப்பயிற்சி உண்டு. நாள்தோறும் தியானம் செய்யத் தவறுவதில்லை. இப்போது யோகாசனமும் இவரது அன்றாட வழக்கங்களில் ஒன்றாகி விட்டது. மனஇறுக்கத்தைக் குறைத்து, இரவில் நன்கு உறங்க யோகா உதவுகிறது என்பது இவரது நம்பிக்கை. தோல்விகளைக் கண்டு துவளாத இவர் இன்று 'கபாலி'யாக வெற்றி அவதாரம் எடுக்கக் காத்திருக்கிறார்!

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!