நெருப்பாகத் தொடங்கியது ‘கபாலி’

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

சூப்பர் ஸ்டார் ரஜி­னி­காந்­தின் 'கபாலி' திரைப்­ப­டம் வந்த­வு­டன் பார்த்தே ஆக வேண்டும் என்ற பேரார்­வத்­தில் ரசி­கர்­கள் நுழை­வுச்­சீட்­டின் விலையைக்­கூட பெரி­து­படுத்­தவில்லை. நேற்று முன்­தி­னம் இரவு 9.30 மணி அளவில் திரை­யி­டப்­பட்ட 'பிரி­மி­யர்' காட்­சியைப் பார்ப்­ப­தற்கு ரசி­கர்­கள் ஒரு டிக்­கெட்­டுக்கு $25 கட்­ட­ணம் செலுத்த வேண்­டி­யி­ருந்தது. இதற்­காக 'ரெக்ஸ் மெக்­கென்சி', 'கோல்டன் மைல் ரெக்ஸ்' திரை­ய­ரங்­கு­களில் நேற்று முன்­தி­னம் இரவு 7.00 மணி­யி­லி­ருந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் ஆயி­ரக்­க­ணக்­கில் வந்த­தால் பாது­காப்­புத் தடைகளைப் போட்டு பாது­காப்பு அதி­கா­ரி­களின் உதவி­ யு­டன் ரசி­கர்­களை வரிசைப்­படுத்தி கூட்­டத்தைக் கட்­டுப்­படுத்த வேண்­டி­யி­ருந்தது.

இது­வரை­யில் இல்லாத வகையில் ஆக உயர்ந்த கட்­ட­ணத்­தில் நுழைவுச் சீட்­டு­கள் விற்­கப்­பட்­ட­தா­கக் கரு­தப்­படும் 'கபாலி' திரைப்­ப­டத்தை முதலில் பார்க்­கச் சென்ற­வர்­களுக்கு ஓர் ஆச்­ச­ரி­ய­மும் காத்­தி­ருந்தது. திரைப்படம் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர், ரஜினியின் 'கட் அவுட்' உருவப் படம் மேடைக்குக் கொண்டுவரப்பட்டது. விசில் பறக்க, ரசிகர்களின் கூச்சலும் ஆரவாரமும் அரங்கை அதிர வைக்க, ரஜினியின் உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, கற்பூரம் காட்டப்பட்டது. இதன் தொடர்­பில் பேசிய 'ரெக்ஸ்' அரங்­கின் உரிமை­யா­ளர் திரு செந்தில் குமார் "இது முன்­கூட்­டியே திட்­ட­மிட்ட விளம்பர உத்­தி­யா­கும்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!