கேத்ரின் தெரசா முதன் முதலில் தமிழில் நடித்த படம் 'மெட்ராஸ்'. இந்தப் படத்திற்குப் பிறகு அதர்வாவுடன் 'கணிதன்', விஷாலுடன் 'கதகளி' படங்களில் நடித்து இருந்தார். தற்பொழுது தமிழில் ஒரு படம் மட்டும் இருப்பதால் தெலுங்குப் பக்கம் சாய்ந்திருக்கிறார். தெலுங்கில் கேத்ரின் தெரசா, அல்லு அர்ஜூன் ஜோடியாக அண்மையில் நடித்து வெளிவந்திருக்கும் படம் 'சரைனொடு'. இதில் அவர் 'ஹன்சிதா ரெட்டி' என்ற பெயரில் எம்.எல்.ஏ.வாக நடித்துள்ளார். இந்தப் படம் வெற்றி பெற்றதால், ஆந்திர ரசிகர்கள் இவரை எம்.எல்.ஏ. என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எங்கு சென்றாலும் "அடுத்த தேர்தலில் எங்களுடையத் தொகுதியில் நீங்கள் நிற்கவேண்டும். நாங்கள் உங்களை கட்டாயம் எம்.எல்.ஏ.வாக எங்கள் தொகுதிகிக்குத் தேர்ந்தெடுப்போம்," என்கிறார்களாம்.
"ஆந்திர ரசிகர்கள் என்னை எம்.எல்.ஏ. என்று அழைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த அளவிற்கு அவர்கள் மனதில் அந்தக் காதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. தற்போது கோபிசந்த் ஜோடியாக ஒரு படத்திலும், ராணா ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்து வருகிறேன். "தமிழில் ஆர்யாவுடன் 'கடம்பன்' படத்தில் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன்," என்றார் கேத்ரின் தெரசா.