அனுஷ்கா: ஆரோக்கியமே அழகு

சரித்திரப் படமா? கூப்பிடுங்கள் அனுஷ்காவை என்று சொல்லுமளவிற்கு சரித்திர நாயகி ஆகிவிட்டார் அனுஷ்கா. அவருடைய உயரம், அழகு, சண்டைக் காட்சிகள் எதுவாக இருந்தாலும் அனைவரும் அசரும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தும் திறமை என்று அசத்தி வருகிறார் அனுஷ்கா. அவருக்கு 34 வயதாகிவிட்டது என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அந்த அளவிற்கு 16 வயது சிறுமிபோல் துறுதுறுவென நடித்து வருகிறார்.

தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகந்நாத் அழைப்பால் நடிப்புத் துறைக்கு வந்தார் அனுஷ்கா. "யோகாவைக் கற்றுக் கொண்டு ஹைதராபாத்தில் யோகா வகுப்புகளை எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு வந்தது. நடிப்பு பற்றி எதுவும் தெரியாமல் திரைத்துறைக்கு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் என்னால் இதில் முழுவதுமாக ஈடுபட முடியவில்லை. மனதுக்கு ஒவ்வாமல் இருந்தாலும் முயற்சி மற்றும் ஈடுபாட்டினை கைவிடாமல் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன்.

"என்னை அடையாளப்படுத்துவதற்கான படம் என்றால் என் கையில் இருந்த 'பாஸ்போர்ட்' படம் மட்டுமே. அதற்குப்பிறகு, ஹைதராபாத் அழைத்துச் சென்று நிறைய படங்கள் எடுத்தார்கள். என்னுடைய படிப்பு மற்றும் 'பாஸ்போர்ட்' அனைத்திலும் என்னுடைய பெயர் 'ஸ்வீட்டி' என்று இருக்கும். அதைத்தான் 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் 'ஸ்வீட்டி' என்று வைத்தார்கள். அனுஷ்கா என்னும் பெயர் திரைக்காக வைக்கப்பட்டது.

"ஆரம்பத்தில் நான்கு, ஐந்து முறை அனுஷ்கா என்று கூப்பிட்ட பிறகுதான் திரும்பிப்பார்ப்பேன். அதுவே, 'ஸ்வீட்டி' என்றால் உடனே திரும்பிப் பார்த்துவிடுவேன். பல இரவுகளில் நான் நடிகருடன் இணைந்து நடிக்க வெட்கப்பட்டு அழுதிருக்கிறேன். அப்போதெல்லாம் 'இந்த நாள் கடந்து போகாதா' என நினைத்திருக்கிறேன்,'' எனத் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்தார் அனுஷ்கா. இவர் ஒருவர்தான் தற்பொழுது தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த மூன்று மொழிகளிலுமே ரசிகர்களால் முன்னணி கதாநாயகியாக கொண்டாடப்படுகிறார். அழகான காதலி, குண்டு பெண், வாள் வீசி சண்டையிடும் ராணி, அழுக்கு அழகி என்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!