‘கண்ணீரைத் துடைக்காத வரவு செலவுத் திட்டம்’

சென்னை: தமிழக அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கையானது ஏழை, நடுத்தர மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் இல்லை என திமுக தலைவர் கருணாநிதி குறை கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கை, வெறும் காகிதப் பூவாகவும் கானல் நீராகவும் இருப்பதாக விமர்சித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் சட்டப் பேரவையில் வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்யும் போதும் முதல்வர் குறித்த நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்தின் பாராட்டுப் புராணம் அவையடக்கம் இன்றி எல்லை மீறுவதாகச் சாடிய அவர், முக்கிய துறைகளுக்கு இடைக்கால வரவு செலவுத் திட்ட அறிக்கையில் ஒதுக்கப்பட்ட அள வுக்குக்கூட திருத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையில் நிதி ஒதுக்க முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

"கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட அறிக்கையில், ரூ.36 ஆயிரத்து 740 கோடியே 11 லட்சம் அளவுக்கு நிதிப் பற்றாக் குறை இருக்கும் என மதிப்பிடப் பட்டது. ஆனால், தற்போது நிதிப் பற்றாக்குறையானது ரூ.40 ஆயிரத்து 533 கோடியே 84 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த உற் பத்தி மதிப்பில் 2.96% ஆகும். "மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக் குறை மூன்று விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும் என வரையறுக் கப்பட்டுள்ளது. 2.96 விழுக்காடா னது வரையறுக்கப்பட்ட அளவை விட 0.4 விழுக்காடு மட்டுமே குறைவு. எதிர்வரும் நிதியாண்டில் ஆண்டில் இது 3.34 விழுக்காடாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ள னர்," என்று கருணாநிதி விவரங் களைப் பட்டியலிட்டுள்ளார். இதன் மூலம் தமிழக நிதி நிலைமை எந்தளவில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், நிதி பற்றாக்குறையை அரசு எவ்வாறு கட்டுப்படுத்த போகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் 2017 மார்ச் மாதம் தமிழக அரசின் கடன் ரூ.2 லட் சத்து 47 ஆயிரத்து 31 கோடியாக இருக்கும் என இடைக்கால வரவு செலவுத் திட்ட அறிக்கையில் கூறப் பட்டிருந்ததைக் குறிப்பிட்ட அவர், தற்போது தமிழகத்தின் கடன் ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடியாக இருக்கும் என அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். ஒரு சில மாதங்களில் அரசின் கடனானது ரூ.5,400 கோடி உயர்ந் துள்ளது என்றும் அவர் கூறியுள் ளார். 110வது விதியின்கீழ் பேர வையில் படித்த அறிக்கைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்பட வில்லை என்றும் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!