நிகிலா விமல்: நல்ல பாத்திரங்களே எனது தேவை

'வெற்றிவேல்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர் நிகிலா விமல். இப்போது அவருடன் 'கிடாரி' படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் 'பாக்யதேவதா' என்ற படத்தில் அறிமுகமான இவர், பின்னர் தமிழில் 'ஒன்பது குழி சம்பத்', 'பஞ்சு மிட்டாய்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்படங்கள் இன்னும் வெளி யாகவில்லை. இந்நிலையில் சசிகுமாருடன் நடித்த 'வெற்றிவேல்' படம் நிகிலா வுக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளது. "முதலில் சசிகுமார் சாருடன் நடிக்க என்னை ஒப்பந்தம் செய்ய வந்தபோது நம்பவே முடியவில்லை.

ஏனெனில் எனது நடிப்பில் ஏற்கெனவே உருவான படங்கள் சிக்கலில் இருக்கும்போது புதிய வாய்ப்புகள் கிடைக்காது என்றே நினைத்தேன். ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்றும் பயந்தேன். "ஆனால் திரையுலகின் இத்தகைய நம்பிக்கைகளை மீறி எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. இப்போது அவருடன் மீண்டும் 'கிடாரி' படத்திலும் ஜோடி சேர்ந் துள்ளேன். இந்தப் படம் எனது திறமையை வெளிப்படுத்தும் படமாக அமையும். "இது கிராமத்துக் கதையை மையமாகக்கொண்ட படம். நடிப்பை வெளிப்படுத்தும் கதா பாத்திரம் கிடைத்திருக்கிறது இயக்குநர் பிரசாத் முருகேசன் திரைக்கதையைப் பரபரப்பாக அமைத்திருக்கிறார். "எனக்கு கவர்ச்சி சரிப்பட்டு வராது. எனது திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங் களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பேன். "சசிகுமார் போன்றோரின் படங்களில் நடிப்பதை மிகவும் விரும்புகிறேன். ஏனெனில் இவர் கள் கதைகளை மட்டுமே நம்பு கிறவர்கள்," என்கிறார் நிகிலா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!