கவனமாக இருப்பதாக சொல்லும் கீர்த்தி

தமிழில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தாலும், கால்‌ஷீட் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்வதாகச் சொல்கிறார் இளம் நாயகி கீர்த்தி சுரேஷ். கால்‌ஷீட் விவகாரங்களில் தனது தாய் மேனகாவின் தலையீடு அறவே இல்லை என்றும் கூறுகிறார். "அம்மா எனது விஷயங்களில் அதிகம் தலையிட மாட்டார். ஆனால் நான்தான் அவரிடம் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்வேன். அவர் மூத்த நடிகை என்பதால், திரைத்துறையை நன்கு புரிந்து வைத்துள்ளார். எனவே அவரது ஆலோசனைகள் எனக்கு தேவை. "நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே விஜய்க்கு ஜோடியாவேன் என கனவிலும் நினைக்கவில்லை. தனு‌ஷுடன் நடித்துள்ள 'தொடரி' விரைவில் வெளியாகிறது. இப்போது சிவகார்த்திகேயனுடன் 'ரெமோ', 'பாம்புசட்டை' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். அப்படங்கள் எல்லாம் அடுத்தடுத்து வெளியாகும்," என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!