‘கபாலி’ படம் குறித்த கருத்து: கவிஞர் வைரமுத்து விளக்கம்

'கபாலி'யைத் தோல்விப் படம் எனத் தாம் குறிப்பிடவில்லை என கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, ஒரே ஒரு வார்த்தை விடுபட்ட தால், தாம் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித் துள்ளார்.

கவிஞர் வைரமுத்து அண்மையில் பங்கேற்ற விழாவில், "சிலவற்றை நான் புரிந்துகொள்கிறேன்," என்று குறிப்பிட்டு, அரசியலை, விஞ்ஞா னத்தை என ஒவ்வொன்றாகப் பட்டிய லிட்டார். இறுதியில், "கபாலி தோல்வி யையும் புரிந்துகொள்ளவேண்டியிருக் கிறது," என்று அவர் குறிப்பிட்டார். அவரது இந்த உரை ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. வைரமுத்துவின் வார்த்தைகளைக் கேட்டவர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளையும் பதிவிட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வைரமுத்து அளித்த விளக்கம் அமைதியை ஏற்படுத்தி உள்ளது.

"கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேச நேர்ந் தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள் நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கிச் சொன்னேன். "கடவுளை ஏற்றுக்கொள்வது ஒரு நிலை; புரிந்து கொள்வது ஒரு நிலை. ஏற்றுக்கொள்ளாததைக்கூட நாம் புரிந்துகொள்ள முடியும். கடவுளை நான் ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட அதன் உளவியல் தேவையைப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்பதை விரிவாகச் சொல்ல முயன்றேன். "ஆண், பெண், உறவுகள், இல்ல றம், அன்பு, காதல், கண்ணீர், அரசி யல், கலை, அண்மையில் காணாமல் போன விமானம் மற்றும் 'கபாலி'யின் தோல்வி இவைகளை ஏற்றுக்கொள்ள முடியாத இடத்திலும் புரிந்துகொள்ள வேண்டும் என்று உணர்ச்சி ஓட்டத்தில் குறிப்பிட்டேன்.

நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!