செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது பிரபுதேவாவின் ‘தேவி’

பிரபுதேவா நடித்துவரும் 'தேவி' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா, தமன்னா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள புதிய படம் 'தேவி'. இதில் இந்தி நடிகர் சோனு சூட், எமி ஜாக்சன் நடித்துள்ளனர். மேலும், வில்லனாக அமலா பாலின் தம்பி அபிஜித் பால் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தை பிரபுதேவா ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபுதேவாவே தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. திகில் படமாக உருவாகியுள்ள இதன் முன்னோட்ட காட்சிகள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில், பாடல்களையும் வெளியிட உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!