இறுதிக்கட்டத்தில் ‘ஆண்டவன் கட்டளை’

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.
மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இதை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் அன்புச் செழியன் தயாரிக்கிறார். கே இசையமைத்திருக்கிறார்.


மணிகண்டன் இயக்கத்தில் வெளியான 'காக்கா முட்டை' ஏராளமான விருதுகளை வென்றதுடன் வசூலிலும் சாதனைப் படைத்தது. இதனால் 'ஆண்டவன் கட்டளை' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


கடப்பிதழ்த் தொடர்பான பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதையை மணிகண்டன் உருவாக்கி உள்ளார். தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்திருக்கிறது.

அடுத்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!