இயக்குநர் விஜய்: பெற்றோர் சொல்லைத் தட்டமாட்டேன்

நடிகை அமலா பாலும் இயக்குநர் விஜய்யும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்பதுதான் தற்பொழுது தமிழ்த் திரையுலகில் பரபரப்பான செய்தியாகும். அமலா பால், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'தெய்வத் திருமகள்' படத்தில் நடித்தபோது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து இயக்குநர் விஜய் இயக்கிய 'தலைவா' படத்திலும் அமலா பால் நடித்தார். இரண்டு பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி கொச்சியில் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்தது. அதே மாதம் 12ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு சென்னை 'போர்ட் கிளப்'பில் அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

திருமணம் முடிந்து கிட்டத்தட்ட இரு ஆண்டுகள் முடிந்த நிலையில் அமலா பாலுக்கும் அவரது கணவர் விஜய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாயின. இதை இருவருமே மறுக்கவில்லை. இவர்களின் விவாகரத்து பற்றி தற்பொழுது இயக்குநர் விஜய்யின் தந்தை ஏ.எல்.அழகப்பன் கூறுகையில், "நடிகை அமலா பால் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்த பிறகே என் மகனைத் திருமணம் செய்துகொண்டார். "அதன்பின்னர் அவரை வைத்து என் மகன் சில விளம்பரப் படங்களை எடுத்தார். அமலா பால் யாரிடமும் சொல்லாமல் 'அம்மா கணக்கு' படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தனு‌ஷுடன் 'வட சென்னை' படத்திலும் நடிக்கின்றார். எங்களிடம் சொல்லாமல் வேறு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

"அதைப் பற்றி அவரின் பெற்றோரிடம் கேட்டதற்கு எங்களுக்கே தெரியாது என்கிறார்கள். "என் மகன் தொடர்ந்து படம் இயக்கமுடியாமல் மன உளைச்சலில் இருக்கின்றார். அதனால் அமலா பாலை விட்டு விலகுவது என்று முடிவு எடுத்திருக்கிறார்," என்று கூறினார். இதுபற்றி இயக்குநர் விஜய்யைத் தொடர்பு கொண்டபோது, "இந்தப் பிரச்சினை பற்றி நான் பேச விரும்பவில்லை. நான் எப்போதும் பெற்றோர் சொல்லைத்தான் கேட்பேன். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். அதில் உறுதியாகவும் இருப்பேன். அமலா பால் பற்றி எதுவும் கூறத் தயாராக இல்லை," என்று கூறினார்.

அமலா பால் கவர்ச்சியாக உடை உடுத்தி, அடிக்கடி விருந்துகளுக்குச் சென்று ஆட்டம் போடுவதைப் பார்க்கும் விஜய்யின் பெற்றோர் மன வேதனை அடைந்ததும் விவாகரத்துக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!