தீபிகாவைக் கழற்றிவிட்ட சல்மான் கான்

'சுல்தான்' படத்தையடுத்து சல்மான் கான் நடிக்கும் புதுப் படத்தின் பெயர் 'ட்யூப்லைட்'. இந்தப் படத்தில் தீபிகா படுகோனை ஒப்பந்தம் செய்யவேண்டாம் என்று சல்மான் கான் தடுத்ததாகச் செய்தி பரவியிருக்கிறது. சல்மான் கான் நடிப்பில் வெளியான 'சுல்தான்' படம் ரூ.550 கோடி வசூல் செய்துள்ளது. சல்மானுடன் நடிக்க 'பாலிவுட்' நடிகைகள் போட்டாபோட்டி போடுகிறார்கள். இந்நிலையில் தீபிகா படுகோன் "சல்மானுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது," என்று கூறி வந்தார். 'பஜ்ரங்கி பாய்ஜான்' வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குநர் கபீர் கான். தற்போது அவர் சல்மானை வைத்து 'ட்யூப்லைட்' என்ற படத்தை இயக்க உள்ளார். கபீர் 'ட்யூப்லைட்' படத்தின் கதாநாயகியாக தீபிகாவை ஒப்பந்தம் செய்ய நினைத்து அவரிடம் கதையைச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் தீபிகாவோ "படத்தில் எனக்கு சல்மானுக்கு நிகராக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் வேண்டும். கதையை மாற்றி எழுதி வாருங்கள்; பார்க்கலாம்," என்றாராம். இதைக் கேள்விப்பட்ட சல்மான் கான் இயக்குநரிடம் "தீபிகா வேண்டாம். வேறு யாராவது சீன நடிகையை ஒப்பந்தம் செய்யுங்கள்," என்று கூறிவிட்டாராம். சல்மான் கான் பேச்சுக்கு மறுப்பேது? கபீர் கான் அலைந்து திரிந்து ஒரு சீன நடிகையை சல்மானுக்கு ஜோடியாக்கி விட்டார். 1962ஆம் ஆண்டு இந்தியா=சீனா இடையே நடந்த போரை அடிப்படையாக வைத்து 'ட்யூப்லைட்' படம் எடுக்கப்படுகிறது. அதனால் சீன நடிகை நடித்தால் கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று சல்மான் கூறியதாகச் சொல்லி தீபிகாவை இயக்குநர் சாந்தப்படுத்தி இருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!