உதயநிதி படத்தில் நடிக்கும் ரெஜினா

எழில் இயக்கத்தில் உதயநிதி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து உதயநிதியிடம் கதை கூறியுள்ளார் இயக்குநர் எழில். அக்கதை உதயநிதிக்கு பிடித்துப் போகவே உடனே தேதிகள் ஒதுக்கினார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உதயநிதியின் நண்பர் கதாபாத்திரத்தில் சூரி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். தற்போது இப்படத்தின் நாயகியாக ரெஜினா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைத் தொடர்ந்து ரெஜினா ஒப்பந்தமாகி இருக்கும் படம் இது. ரெஜினா மட்டுமன்றி சிருஷ்டி டாங்கேவும் முக்கிய கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு இயக்குநர் கெளரவ் இயக்கத்தில் உருவாகும் படம், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ஆகியவற்றுக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறாராம் உதயநிதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!