ஹன்சிகா: சிம்புவுடன் நடிக்கவில்லை

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் குறித்துத் தினமும் ஏதாவது ஒரு செய்தி வெளியான வண்ணம் உள்ளது. இப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக வெளியான தகவலை ஹன்சிகா மறுத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. திண்டுக்கல்லில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைத் திரும்பியுள்ளனர் படக்குழுவினர். சிம்பு, ஸ்ரேயா, மகத், வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் காட்சிகளைப் படமாக்கி உள்ளனர். விரைவில் சென்னையில் பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறாராம் சிம்பு. ஒரு வேடத்துக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். மற்ற இரு பாத்திரங்களுக்கான நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார்கள். இதில் ஒரு நாயகியாக ஹன்சிகா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அதை மறுத்துள்ள ஹன்சிகா, "அச்செய்தி வெறும் வதந்தி. நான் அப்படத்தில் நடிக்கவில்லை," என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!