நடிப்புப் பேய் ரித்விகா

பாலா இயக்கிய 'பரதேசி' படத்தில் 'கருத்த கன்னி'யாக அறிமுகமானவர் ரித்விகா. பத்துப் படங்களை மட்டுமே கடந்து வந்தி ருக்கும் இவர், கதாபாத்திரத்துக்கான நடிப்பைத் தருவதில் நம்பிக்கைக்குரிய வளரும் கலைஞராக ரசிகர்களை ஈர்த்து வருகிறார். 'கபாலி' படத்தில் போதை மருந்துக்கு அடிமையாகி மீளத் துடிக்கும் பெண்ணாகச் சிறந்த நடிப்பைத் தந்திருந்த ரித்விகாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

"நான் பிறந்தது வளர்ந்தது, படித்தது, வாழ்வது என எல்லாமே சென்னையில்தான். அம்மாவுக்கும் சென்னைதான் சொந்த ஊர். அப்பா மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். சினிமா, நடிப்புதான் ஏதிர்காலம் என எப்போது முடிவு செய்தீர்கள்? "எட்டு வயதில் என்று சொன்னால் உங்களுக்குச் சற்றே அதிர்ச்சியாக இருக் கும். மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே நடிகை யாக உருவாக வேண்டுமென நினைத்தேன்.

மாறுவேடப் போட்டி, பாட்டுப் போட்டி, நடனப் போட்டி என ஒவ்வொரு வருடமும் ஆர்வமாக பங்கேற்பேன். "பள்ளி நாடகங்களில் எனக்குத் தவறா மல் ஒரு கதாபாத்திரம் அமைந்துவிடும். எட்டாம் வகுப்பு முதல் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் இடையேயான போட்டிக ளில் பங்கேற்கத் துவங்கினேன். எதில் நமக்கு ஆர்வம் அதிகமாக உள்ளதோ, அதை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தால், எங்கே இருந்தாலும் நம்மை உரியவர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அது இப்போது உண்மையாகி உள்ளது.2016-08-03 05:50:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!