விஜய் சேதுபதி: ஆச்சரியமாக உள்ளது

தமிழ்த் திரையுலகின் மிக 'வித்தி யாச நடிகன்' என்று பலரும் செல்லமாகக் கொஞ்சுகிறார்கள். 'ப்ப்பா' என அவர் சொன்னால் கூடப் பரவசம் ஆகி கைத் தட்டுகிறார்கள்.
விறுவிறு என வளர்ச்சியில் விஜய் சேதுபதி தொட்டிருப்பது பெரிய உயரம். அவர் நடிக்கும் 'தர்மதுரை' படத்தின் பாடல்கள் வெளியீடு கண்டிருக்கிறது. இனி அவர் பேசட்டும், நாம் கேட்போம்.
"இந்தப் படத்தைக் கால இயந்திரம் போல் பார்க்கிறேன் எனலாம். இதேபோல் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஏப்ரல் மாதம். 'தென் மேற்குப் பருவக்காற்று' படப்பிடிப்பில் நடுங்கிக்கொண்டே இருக்கிறேன். அதை வெளியே தெரியாமல் சாமர்த்தியமாக மறைக்கிறேன். 'சரியாக இல்லையெனில் திருப்பி அனுப்பிவிடுவார்களா', 'டேக் அதிகம் போகாமல் முடிக்க வேண்டுமே' என மனம் நிறைய கவலைகள்.
"நான் ஒரு உணர்ச்சிப்பூர்வ மான முட்டாள். ஆறு ஆண்டுக ளுக்கு முன்பு யோசிக்கும் அனுப வத்தை எனக்குத் தந்த இயக்குநர் சீனு ராமசாமிக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.
"எப்படியோ சினிமா வாழ்க்கை தொடங்கிவிட்டது. படப்பிடிப்பில் அன்று நின்ற அதே இடத்தில்தான் இப்போதும் நிற்கிறேன். ஏதோ ஒரு விதமான உணர்வு, சாதித்துக் கிழித்துவிட்டதாகச் சொல்லவில்லை. அப்படி வர்ணிக்கவும் முடியவில்லை. இளையராஜா இசையைக் கேட்பது போல் பரவசமாக இருக்கிறது.
'தர்மதுரை' எப்படி இருக்கும்?
"இதில் நான் ஒரு மருத்துவர். அவரது வாழ்க்கையில் ஒரு பத்து வருடத் தொகுப்புதான் இப்படம். அனேகமாக ஒவ்வொருவர் வாழ் விலும் முக்கிய நிகழ்வுகள் எல் லாம் 20 வயதிலிருந்து 30 வய திற்குள்தான் நடக்கும்.
"வாழ்க்கையைப் புரட்டிப் போடும் விஷயங்கள் அப்போதுதான் நடக் கும். ஏதோ ஓர் ஆசை இருந்தி ருக்கும். பெண்கள், வாழ்க்கை, பணம் என நிறைய மாற்றங்கள் நடக்கிற காலம். என்ன முடிவு எடுக்கலாம் என நமக்குத் தெரியாது. எதை எப்படிப் புரிந்து கொள்வது எனவும் தெரியாது. அப்படிப்பட்ட காலத்தை ரசிகர்கள் முன் எடுத்து வைக்கும் படம் 'தர்மதுரை'. இது அழகான படம்," என்கிறார் விஜய் சேதுபதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!