திரையுலகப் புள்ளிகள் பாராட்டிய படம்

வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார் நடிப்பில் உருவாகியுள்ள 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் வெளிவந்த 'தட்டத்தின் மறையத்து' படத்தின் மறுபதிப்பாக உருவாகியுள்ள 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கி யுள்ளார். இப்படத்தில் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார், நாசர், தலைவாசல் விஜய், வித்யுலேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாவதாகப் படக்குழுவினர் முன்பு அறிவித்திருந்தனர்.

இதையடுத்து படத்தை வெளி யிடுவதற்கு முன்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, விநியோகிப்பாளர்க ளுக்கு படக்குழுவினர் இப்படத்தை திரையிட்டுக் காண்பித்தனர். ஆனால் படத்தைப் பார்த்த அவர்கள் அனைவருமே படம் நன்றாக வந்துள்ளதாகப் பாராட்டி யதுடன், ஒன்றிரண்டு வாரங்கள் தள்ளி, சரியான தேதியில் வெளியிட்டால் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றி பெறும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, படத்தின் தயா ரிப்பாளர்கள் படத்தை ஒன்றிரண்டு வாரங்கள் தள்ளி வெளியிட முடிவு செய்துள்ளனராம்.

'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தில் இடம்பெறும் காட்சியில் வால்டர் பிலிப்ஸ், இஷா தல்வார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!