கை நிறைய பணம் தந்தால் புதுமுகங்களுடன் நடிக்கத் தயார்

தமிழில் முன்னணி நடிகர்களின் படங்கள் தான் எதிர்பார்த்தபடி ஒப்பந்தமாகாத நிலையில் புதுமுக நாயகர்களுடன் இணைந்து நடிக்கத் தயாராகிவிட்டார் நந்திதா ஸ்வேதா. அதனால் சில இயக்குநர்களிடம் கதை கேட் டுள்ள அவர், பிரபலமில்லாத புதுமுக நடிகர்களின் படங்கள் எனும்போது தனக்கான சம்ப ளத்தை அதிகமாகத் தரவேண்டும் என்றொரு கட்டளையையும் தனது சார்பில் வைத்திருக்கிறார்.

நந்திதா சொன்ன சம்பளத்தைக் கேட்ட சில தயாரிப்பாளர்களுக்கு தலைசுற்றிவிட இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளாமல் உள்ளதாகத் தகவல். சிவகார்த்திகேயன், விஜய சேதுபதி, விமல் என்று நடித்து வந்த நந்திதா 'காத்திருப்போர் பட்டியல்' -என்ற படத்தில் 'சென்னையில் ஒருநாள்' படத் தில் நடித்த சச்சினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சச்சின் தமிழில் பெரிதாக அறிமுகமில்லாத மலையாள நடிகர் என்பதால் அதைக் காரணம் காட்டி ரூ.20 லட்சம் சம்பளம் பேசி நடித்துள்ளார் நந்திதா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!