நயன்தாராவுக்கு நன்றி கூறிய நடிகை

இயக்குநர் பிரியதர்ஷன், நடிகை லிசி இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் கல்யாணி. அமெரிக்காவில் தங்கிப் படித்து வந்தார். சென்னை திரும்பிய அவர் படங்களுக்கு அரங்கம் நிர்மாணிக்கும் துறையில் ஆர்வமிருப்பதை தனது தாயார் லிசியிடம் தெரிவித்தார். மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்த லிசி இது தொடர்பாக நடிகர் விக்ரம், நயன்தாராவை சந்தித்துப் பேசினார். இவர்கள் இருவரும் தற்போது 'இருமுகன்' படத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர். தனது மகளை அரங்கு உதவி இயக்குநராகப் பணியாற்ற இருவரிடமும் அனுமதி கேட்டாராம் லிசி. நயன்தாரா உடனே சம்மதம் தெரிவித்ததுடன் விக்ரம் மூலமாக பட இயக்குநர் ஆனந்த் சங்கர், கலை இயக்குநர் சுரே‌ஷின் சம்மதத்தையும் பெற்றாராம். இதையடுத்து நயன்தாரா, விக்ரம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் லிசி. பிரியதர்ஷனும் தன் பங்குக்கு நயன்தாரா, விக்ரமை தொடர்புகொண்டு பேசி நன்றி கூறினாராம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!