படப்பிடிப்பில் கதறிய டாப்சி

பாலியல் தொல்லை­யில் இருந்து முழுமை யாக மீளும் நாள்தான் பெண்­களுக்கு முழு சுதந்­தி­ரம் கிடைத்­த­தற்­கான அறிகுறி என்­கிறார் இளம் நாயகி டாப்சி. தனது அண்மைய பேட்டி ஒன்றில் பெண்­களுக்கு சுதந்­தி­ர­மும் பாது­காப்­பும் அளிக்­க­வேண்­டி­யது சமு­தா­யத்­தின் கடமை என்றும் கூறி­யுள்­ளார். "நள்­ளி­ர­வில் ஒரு பெண் எப்போது தனியாக சாலையில் நடந்து செல்ல முடிகி றதோ அப்­போ­து­தான் பெண்­களுக்கு முழு சுதந்­தி­ரம் கிடைத்­த­தாக அர்த்­தம் என்று மகாத்மா காந்தி கூறி இருக்­கிறார். ஆனால் இன்­றுள்ள நிலைமை அப்­ப­டியா இருக்­கிறது? "டெல்­லி­யில் இளம்­பெண் நிர்­ப­யாவை ஒரு கும்பல் நாசம் செய்த சம்ப­வத்தை எப்படி மறக்­க­மு­டி­யும்? எல்லா இடங்களி­லும் பெண்களுக்கு எதிரான குற்­றங்கள் நடக்கின்றன. பெண்கள் பல­வி­த­மாக மான­பங்கம் செய்யப்படு­கிறார்­கள்.

"இது­போன்ற சம்ப­வங்கள் இல்லாத இந்­தி­யாவைப் பார்க்க ஆசைப்­படு­கி­றேன் என்று இந்தி நடிகர் அமி­தாப்­பச்­சன் கூறி இருக்­கிறார். அதே ஆசை எனக்­கும் இருக்­கிறது. பாலியல் கொடுமை­களில் இருந்து பெண்கள் மீளும் நாள்தான் அவர்­களுக்கு முழு சுதந்­தி­ரம் கிடைத்த நாளாக இருக்­கும். பெண்­களுக்கு எதிரான அனைத்­து­வித பாலியல் கொடுமை­களும் தடுக்­கப்­பட வேண்டும். "நான் அமி­தாப்­பச்­ச­னு­டன் 'பிங்க்' இந்தி படத்­தில் பாலியல் பலாத்­கா­ரத்­திற்கு உட்­படும் இளம்­பெண் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்து இருக்­கி­றேன். அதில் நடித்­த­போது இந்த சித்ரவதைக்கு ஆளாக்­கப்­பட்ட பெண்கள் எப்படி கஷ்­டப்­பட்டு இருப்­பார்­கள் என்று உணர முடிந்தது.

"படப்­பி­டிப்பில் என்னைக் கட்டுப்படுத்த இய­லா­மல் அழுதுவிட்டேன். படக்குழு­வி­னர் என்­னி­டம் இது கதைதான் என்று சொல்லி ஆறுதல் படுத்­தினார்­கள். "நம் பெண்கள் மதிக்­கப்­பட வேண்டும், அவர்­களைப் போற்றவேண்டும். 'பிங்க்' படம் பார்ப்­ப­வர்­கள் பாலியல் சித்­ர­வதையை அனு­ப­வித்த ஒரு பெண்ணின் துக்­கத்தை உணர்­வார்­கள். பாலியல் குற்றங்களைக் குறைப்­ப­தற்­கான தூண்­டு­கோ­லாக இப்­ப­டம் இருக்­கும்," என்­கிறார் டாப்சி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!