விஷால்: வடிவேலுவின் நகைச்சுவை அபாரம்

விஷால் தற்போது நடித்து வரும் 'கத்தி சண்டை' படத்தில் வடிவேலு மனநல மருத்துவராக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஷால் தற்போது சுராஜ் இயக்கத்தில் 'கத்தி சண்டை' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகி றது. இந்தப் படத்தின் மூலம் வடி வேலு மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு மாறியுள்ளார். மேலும் இன்னொரு நகைச்சுவை நடிகராக சூரியும் இப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் வடிவேலு மருத்துவராக நடிப்பதாக முதலில் செய்திகள் வெளிவந்தது.

தற்போது இப்படத்தில் மனநல மருத்துவராக நடிப்பதாகக் கூறப் படுகிறது. அவரது கதாபாத்திரத்தின் பெயர் டாக்டர் பூத்ரி. அவர் விஷாலுக்குச் சிகிச்சை அளிக்க வருவாராம். ஆனால் விஷால் செய்யும் லூட்டிகளால் பாதிக்கப் படுவாராம். அவரது வழக்கமான நகைச் சுவையாக மட்டுமல்லாமல் இப்படத்தின் மூலம் பல நல்ல சமூக கருத்துகளையும் சொல்லப் போகிறாராம் வடிவேலு. முதல் பாதியில் வடிவேலுவும் இரண்டாம் பாதியில் சூரியும் நகைச்சுவையில் அசத்தி இருப்ப தாகப் படக்குழுவினர் கூறுகின்ற னர். இது படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகுமார் தயாரித் துள்ளார். "வடிவேலுவின் நகைச்சுவை எப்படி இருக்கும் என்பது நமக்கெல்லாம் எப்போதோ தெரியும். ஆனால் இந்தப் படத்தில் அவரது வசன உச்சரிப்பு, உடல் மொழி என எல்லாவற்றிலும் தனித் தன்மை காணப்படுகிறது. "ஒவ்வொரு காட்சி படமாகும் போதும் படக்குழுவினர் விழுந்து விழுந்து சிரித்தனர். பலருக்கு கண்ணில் குளம்கட்டிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் படம் வடிவேலுவின் பெயர் சொல்லும் படமாக இருக்கும். "இப்படத்தில் அவரை நடிக்க வைக்க விஷால் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்தச் சமயத் தில் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்," என்கிறார் இயக்குநர் சுராஜ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!