மீனாட்சி: திருமணமாகாமல் சேர்ந்து வாழப் பிடிக்காது

திருமணம் செய்யாமல் ஒருவரை ஒருவர் விரும்பும் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் கலாசாரம் மும்பையில் வசிக்கும் மக்களிடையே அதிகரித்து வரலாம். ஆனால், இந்தக் கலாசாரம் எனக்கு ஒத்துவராது. அதை அநாகரிகம் என்று கருதுகிறேன். நானும் மும்பையில்தான் வசிக்கிறேன் என்றாலும் கட்டுப்பாடு கள் அதிகமுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வள் நான் என்பதால் எங்கள் குடும்பத்தில் இதை எல்லாம் ஆதரிக்கமாட்டார்கள். என் குடும்பத்தினருக்குப் பிடிக்காத எதுவும் எனக்கும் பிடிக்காது என்று தெரிவித்துள்ளார் மீனாட்சி தீக்‌ஷித்.

இளம் வயதிலேயே தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்தவர். நளினமான நடன அசைவுகளால் இளம் ரசிகர் களின் மனதை வசியம் செய்பவரான இந்த மீனாட்சி தீக்‌ஷித், 'பில்லா 2', 'தெனாலிராமன்' படங்களுக்குப் பின் 'பயம் ஒரு பயணம்' படம் மூலம் மீண்டும் தமிழ்ச் சினிமாவில் தலைகாட்டி உள்ளார். இவர் தமிழக ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். "பில்லா 2' என்னை பிரபலப்படுத்தியது. 'தெனாலிராமன்' படத்தில் என் நடிப்பு பாராட்டப் பட்டது. எப்போதும் எனக்கு ஒரு குறை உண்டு.

நான் நடிக்கும் படங்களில் ஒரு சில காட்சிகளிலாவது எனக்கு முக்கியத்துவம் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பேன். மற்ற மொழிகளில் எனக்கான வாய்ப்புக் கிடைக்கிறது. ஆனால் தமிழில் எனக்கு திருப்தி அளிக்கும் வகையிலான பாத்திரங்கள் கிடைக்கவில்லை. இப்போது, 'பயம் ஒரு பயணம்' படம் மூலம் நல்ல வலுவான பாத்திரம் கிடைத்துள்ளது என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!