என்னுடைய திறமையை மதியுங்கள்

மலை­­­யா­­­ளத்­­­தில் வெளி­­­வந்த 'பிரேமம்' படம் தெலுங்­­­கில் மறு­­­ப­­­திப்பு செய்­­­யப்­­­பட்டு வரு­­­கிறது. 'பிரேமம்' படத்­­­தில் சாய் பல்லவி நடித்த கதா­­­பாத்­­­தி­­­ரத்­­­தில் ஷ்ரு­­­தி­­­ஹா­­­சன் நடித்­­­துக்­­­கொண்­­­டி­­­ருக்­­­கிறார். அண்மை­­­யில் அந்தப் படத்­­­தின் பாடல் காட்சி ஒன்று இணை­­­யத்­­­தில் வெளி­­­யா­­­னது. அதைப் பார்த்து மலர் டீச்­­­ச­­­ரின் ரசி­­­கர்­­­கள் கவுண்ட­­­மணி, வடிவேல் மற்ற படங்களில் கிண்டல் செய்யும் காட்­­­சி­­­களை ஷ்ரு­­­தி­­­ஹா­­­சனை கிண்டல் செய்வது போல் காட்­­­சி­­­களை ஒருமைப்­­­படுத்தி இணை­­­யத்­­­தில் பதி­­­வு­­­களைப் போட்­­­டி­­­ருந் த­­­னர்.

அதைப் பார்த்த ஷ்ரு­­­தி­­­ஹா­­­சன் "ஒவ்­­­வொ­­­ரு­­­வ­­­ருக்­­­கும் ஒவ்வொரு திறமை இருக்­­­கும். என்­­­னுடைய திறமையை நான் எப்­­­பொ­­­ழு­­­தும் முழுமை­­­யா­­­கப் பயன்­­­படுத்­­­து­­­வேன். அதைப் பாராட்­­­டுங்கள். அதை விட்­டு­விட்டு நடி­கர்­களைக் கேவ­­­லப்­­­படுத்­­­தா­­­தீர்­­­கள்," என்று இணை­­­யத்­­­தில் பதிவு செய்து இருக்­­­கிறார்.

மலர் கதா­­­பாத்­­­தி­­­ரத்­­­தில் ஷ்ரு­­­தி­­­ஹா­­­சன் நடிக்­­­கிறார் என்ற தகவல் வந்த­­­போதே ரசி­­­கர்­­­கள் கவலைப்­­­பட ஆரம்­­­பித்­­­தார்­­­கள். அந்தப் படத்­­­தின் படப்­­­பி­­­டிப்­­­பில் கலந்து கொண்ட­­­போது முதன் முதலில் ஒரு புகைப்­­­ப­­­டம் வெளி­­­யா­­­னது. அப்போதே 'பிரேமம்' படத்­­­தின் அதி­­­தீ­­­விர ரசி­­­கர்­­­கள் ஷ்ரு­­­தி­­­ஹா­­­சனை பல­­­மா­­­தி­­­ரி­­­யா­­­கக் கிண்டல் செய்து அவரை அலற வைத்­­­தார்­­­கள். தற்போது மீண்டும் அப்படி ஒரு விஷயம் நடந்து கொண்­­­டி­­­ருக்­­­கிறது. சில நாட்­­­களுக்கு முன்பு 'பிரேமம்' தெலுங்கு படத்­­­தின் 'எவரே..' என்ற பாடல் வெளி­­­யா­­­னது.

அதில் ஷ்ரு­­­தி­­­ஹா­­­ச­­­னின் நடிப்பை­­­யும் நடை, உடையை­­­யும் பொறுத்­­­துக்கொள்ள முடியாத 'பிரேமம்' படத்­­­தின் தீவிர ரசி­­­கர்­­­கள் மீண்டும் ஷ்ரு­­­தி­­­ஹா­­­சனை கிண்டல் செய்து படங்களை உரு­­­வாக்கி இணை­­­யத்­­­தில் பதி­­­விட்டு பர­­­ப­­­ரப்பை ஏற்­­­படுத்தி வரு­­­கிறார்­­­கள். அதைப் பார்த்த படக்­­­கு­­­ழு­­­வி­­­னரே பயந்­­­து­­­போய் இணை­­­யத்­­­தில் வரும் பதி­­­வு­­­களைத் தடுக்­கும் அள­­­விற்கு செயல்­­­பட ஆரம்­­­பித்­­­தி­­­ருக்­­­ கின்ற­­­னர். அண்மைய பேட்டி ஒன்றில் ஷ்ரு­­­தி­­­ஹா­­­சன் "பிரேமம்' தெலுங்­குப் படத்தை மலை­­­யா­­­ளப் படத்­­­து­­­டன் ஒப்­­­பிட்­­­டுப் பார்க்க­­­வேண்டாம் என்று கேட்டுக் கொண்­­­டுள்­­­ளார். "அந்தக் கதா­­­பாத்­­­தி­­­ரத்­­­தில் முதலில் நான் நடிக்­­­கத் தயங்­­­கி­­­னேன். ஆனால், இயக்­­­கு­­­நர் கவ­­­ன­­­மாக அந்தப் படத்தை பட­­­மாக்­­­கு­­­வேன் என்று கூறினார்.

"அந்தப் படத்­­­தின் கதா­­­நா­­­ய­­­கன் நாகசை­­­தன்யா. அவர் என்­­­னுடைய நண்பர். அதனால் படத்­­­தில் நடிக்க ஒத்­­­துக்­­­கொண்­­­டேன். 'பிரேமம்' தெலுங்­­­குப் படத்தை புதி­­­தா­­­கப் பார்ப்­­­ப­­­து­­­போல் பார்த்து ரசி­­­யுங்கள்," என்று கேட்டுக் கொண்­­­டுள்­­­ளார். 'பிரேமம்' படத்தைப் பார்க்­­­கா­­­த­­­வர்­­­கள் வெகு சிலரே என்பது ஷ்ரு­­­தி­­­ஹா­­­ச­­­னுக்­­­குத் தெரி­­­ய­­­வில்லை. அவர் அப்­­­ப­­­டிக் கேட்டுக் கொண்டா­­­லும் ரசி­­­கர்­­­கள் சும்மா இல்­­­லா­­­மல் அவர்­­­கள் வேலையைத் தொடர்ந்து செய்து கொண்­­­டு­­­தான் இருக்­­­கிறார்­­­கள். மலர் கதா­­­பாத்­­­தி­­­ரத்­­­தில் நடித்த சாய் பல்லவி நடிப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது என்­கின்ற­னர் ரசி­­­கர்­­­கள்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!