இரு நாயகர்களுக்கு கீர்த்தியின் நன்றி

'ரஜினிமுருகன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'ரெமோ', 'தொடரி' படங்களில் ஒப்பந்தமான கீர்த்தி சுரேஷ், தற்போது விஜய்யின் 60ஆவது படத்திலும் நடிக்கிறார். தவிர தெலுங்கிலும் மூன்று படங்களைக் கைப்பற்றி விட்டார். அவர் நடித்து வரும் அத்தனை படங்களுமே முன்னணி நடிகர்களின் படங்கள்தான். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனு‌ஷுடன் நடித்துள்ள 'தொடரி', சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள 'ரெமோ' ஆகிய இரண்டு படங்களும் வெளியீடு காணத் தயாராகிவிட்டது. இதில் 'ரெமோ'வில் மருத்துவராகவும் 'தொடரி'யில் நடிகையின் ஒப்பனை உதவியாளர் வேடத்திலும் நடித்துள்ளாராம். இரு படங்களுமே சிறப்பாக உருவாகி இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், இதற்காக இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

"தனு‌ஷும், சிவகார்த்திகேயனும் தங்களது கதாபாத்திரங்கள் மட்டுமே முக்கியத்துவம் பெற வேண்டும் என்று சொல்லாமல், எனக்கும் முக்கியத்துவம் கொடுக்குமாறு கூறினார்கள். அதனால்தான் திருப்திகரமாக நடிக்க முடிந்தது. இந்த இரு படங்களுமே தமிழ் சினிமாவில் எனக்கு நல்ல இடத்தைப் பெற்றுத்தரும்," என்று இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!