சூர்யாவின் அடுத்த படங்கள்

முன்னணி நடிகர்கள், கலைஞர்கள் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள், அடுத்து என்ன செய்வார்கள்? என்பதைத் தெரிந்துகொள்வதில் எந்த ரசிகருக்குத்தான் ஆர்வம் இருக்காது?

அந்த வகையில் நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோர் அடுத்து நடிக்கும் படங்கள் குறித்துப் பார்ப்போம். நடிகர் சூர்யா அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது ஹரி இயக்கத்தில் 'எஸ் 3' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில் அனுஷ்கா, ஷ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா, 'கொம்பன்', 'மருது' ஆகிய படங்களை இயக்கிய முத்தையா இயக்கும் பட மொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

இந்நிலையில், 'போடா போடி', 'நானும் ரௌடிதான்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த புதிய படத்திலும் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகக் கேள்வி. ஸ்டூடியோ கிரீன், 2டி என்டர் டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

இதில் நாயகியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தகவல் இல்லை. அநேக மாக, நயன்தாராதான் ஒப்பந்தமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் ஏற்கெனவே 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற தலைப்பில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க திட்ட மிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!