கோடிகளில் புரளும் சம்பளம்

அடடா... சூப்பரப்பு... என மூக்கு மேல் விரல் வைக்க வைக்கிறது கோலிவுட் நாயகன்களின் சம் பளப் பட்டியல். நமக்குப் பிடித்த நாயகன்களின் சம்பளம், சந்தை மதிப்பு, அவர்களின் பலம் என்ன? பலவீனம் என்ன என் பதை கோடம்பாக்க சந்து பொந்து களில் எல்லாம் அலைந்து ஆராய்ந்து விவரம் சேகரிக்கப் பட்டுள்ளது. பெருமூச்சு விட்ட படியே தொடர்ந்து படியுங்கள்.

ரஜினி: 'கபாலி' படத்துக்கு ரஜினி 70 கோடி வாங்கியதாகச் சொல் கிறார்கள். 'எந்திரன் 2' சம்பளம் 100 கோடியைத் தாண்டலாம். முன்பெல்லாம் படத்தின் லாபத் தில் ஒரு பங்கு ரஜினிக்கு போய் விடும். ஆனால், இப்போது ஏன் பிரச்சினை என்று சம்பளமாகவே வாங்கிக்கொள்கிறார். பிடித்தது: ஸ்டைல், மேன்லி லுக், உலகளவில் வற்றாத ரசிகர் வெள்ளம். பிடிக்காதது: - குடும்பம், கமிட்மெண்டுக்குள் சிக்கிக்கொள்வது.

கமல்ஹாசன்: எல்லாமே அவரது சொந்த தயாரிப்புதான். வெளிப் படங்கள் என்றாலும் முதல் காப்பி அடிப்படையில் தான் படத்தை முடித்துக் கொடுப்பார். தனது சம்பளமாக 40 கோடி வரை அதில் குறித்துக்கொள்வார் என்கிறார்கள். பிடித்தது: விதவிதமாக படங்கள் தருவது. பிடிக்கா தது: கமர்‌ஷியல் ஃபார்முலா பிடிபடாதது.

அஜித்: ரஜினி, கமலுக்கு அடுத்து அஜித். முதல் மூன்று நாட்களின் வசூல்தான் தமிழ் சினிமாவையே நிர்ணயிப்பதால் அஜித் தான் இப்போதைக்கு வசூல் சக்கரவர்த்தி. பாலிவுட் ஸ்டைலில் முன்பணமாக குறிப் பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு நடிக்கிறார். படம் முடிந்து நடக்கும் வியாபாரத்தை பொறுத்து தனது பங்கை வாங்கிக்கொள்கிறார். பிடித்தது: தோற்றம், ரசிகர்கள். பிடிக்காதது: -புரமோஷன்களுக்கு வர மறுப்பது, மாஸ் படங்களை தேர்வு செய்வது. விஜய்: 'துப்பாக்கி', 'கத்தி' போல வலுவான திரைக்கதை கிடைத்தால் கோலிவுட்டுக்கே மகா கொண்டாட்டம். துப்பாக்கி யில் 20ஐ தொட்ட சம்பளம் கத்தியில் 30ஐ தொட்டுவிட்டது. ஆனால், தாணுவின் நட்புக்காக 'தெறி' படத்துக்கு 25 கோடி தான் வாங்கியிருக்கிறார். பிடித் தது:- நல்ல கதைகளைத் தேர்வு செய்வது, நடனம். பிடிக்காதது: -அவ்வப்போது எட்டிப்பார்க்கும் அரசியல் ஆசை, நடிப்பில் வெரைட்டி இல்லாதது.

சூர்யா: 'சிங்கம் 2' மெகா ஹிட். ஆனால் அஞ்சானும் மாஸும் சூர்யாவுக்கு பின்னடைவு தந்தன. '24' முதலுக்கு மோச மில்லாத படம். சிங்கம் 3ல் விட்டதைப் பிடித்துவிடுவார் என நம்புகிறார்கள். சம்பளமாக 20 கோடியும் தெலுங்கு ரைட்ஸும் வாங்கிக்கொள்கிறார். பிடித்தது: -எல்லா படங்களையும் கலந்துகட்டி தருவது, பிரச்சினைகளில் சிக்காதது. பிடிக்காதது: -அஜித், விஜய் அளவுக்கு ரசிகர் வட்டம் இல்லாமல் இருப்பது.

தனுஷ்: தோல்வியடையும் படம் என்றாலும் அதில் தனு‌ஷின் நடிப்பு பிரமாதமாகப் பேசப்படும். மைனஸான இதை ப்ளஸ் என நினைத்துக்கொள்வது தான் தனுஷ் செய்யும் தவறு. சம்பளம் 'மாரி' வரை 15 கோடிதான். பிடித்தது: அபார நடிப்பு. பிடிக் காதது: அதிகப்படியான நடிப்பை வலுக்கட்டாயமாக படங்களில் சேர்ப்பது.

சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் இதுவரை தோல்வியே பார்க்காமல் பயணிக்கிறார். காக்கி சட்டையில் 3 கோடியைத் தொட்ட சிவா சம்பளம் இப்போது 15ஐ தொட்டிருக்கிறதாம். -பிடித் தது: மற்றவர்களை மகிழ்விப்பது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!