வெற்றிகரமாக குர்பான் சடங்குகள்

வில்சன் சைலஸ்

ஹஜ்ஜுப் பெருநாளைக் குடும்பத் துடன் அனுசரிக்க திருமதி கதிஜா வுக்கு நேற்று கைகொடுத்து உதவியது ஜமிஆ சூலியா பள்ளி வாசல். வாடகை வீட்டில் கணவர், இரு பிள்ளைகளுடன் வசித்து வரும் இவர், பள்ளிவாசலில் வழங் கப்பட்ட இறைச்சியைப் பெற்றுக் கொள்ள நேற்று வேலை முடிந்து வந்தார். னஅப்பொழுதே வெட்டின ஆட்டு இறைச்சியை அதிக விலை கொடுத்துதான் வாங்க முடியும். ஆனால், ஹஜ்ஜுப் பெருநாள் அன்று ஆண்டுதோறும் அத்தகைய இறைச்சி இலவசமாக அனைவருக் கும் வழங்கப்படுகிறது," என்றார் திருமதி கத்திஜா. சமயப் பண்டிகையைக் குடும்பத் தினருக்காக சமைத்து மகிழ்ச்சி யாகக் கொண்டாடும் உற்சாகத் துடன் இறைச்சி பொட்டலத்துடன் திருமதி கத்திஜா நேற்று வீடு திரும்பினார்.

இவரைப் போன்றே பலரும் தீவு எங்கும் உள்ள பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்பட்ட குர்பான் இறைச்சியைப் பெற்றுக்கொண்டுச் சென்றனர். ஜமி ஆ சூலியா பள்ளிவாசலில் நேற்று சுமார் 217 செம்மறி ஆடுகளும் 75 இளம் ஆடுகளும் குர்பானுக்குப் பயன் படுத்தப்பட்டன என்றார் ஜமிஆ சூலியா பள்ளிவாசலின் தலைவர் திரு ஷேக் ஃபக்ருதீன். கடந்த மூன்று ஆண்டுகளாக ஜாலான் குக்கோ வட்டாரத்தின் வசதிக் குறைந்த குடும்பங்களுக்கு இறைச்சியை விநியோகிக்கும் இப்பள்ளிவாசல், இவ்வாண்டு சுமார் 40 குடும்பங்களுக்கு இறைச்சி வழங்கியது. காலை 9.30 மணியிலிருந்து மாலை சுமார் 6 மணி வரைக்கும் மக்களுக்கு இறைச்சி விநியோகிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!