சாத்னா ரகசியத் திருமணம்

‘பிச்சைக்காரன்’ படத்தின் நாயகி சாத்னா டைட்டஸ் தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்ட செய்தி கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை வெளியிட்ட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் கார்த்தி. பட விழா தொடர்பாக அடிக்கடி சாத்னா டைட்டசை இவர் சந்தித்துப் பேசினார். அப்போது, இருவருக்கும் இடையே காதல் அரும்பியது. பின்னர் தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கினார்கள். இவர்கள் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்த நிலையில், அண்மையில் இருவரும் முறைப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சாத்னாவுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன.

என்றாலும் இந்தப் படங்களில் நடிப்பதை அவர் தவிர்த்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. “நாங்கள் முறைப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கிறோம். சாத்னாவின் விருப்பப்படியும் இரு வீட்டாரின் சம்மதத்துடனும் இந்தத் திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை சாத்னா குறைத்து இருக்கிறார். இது நாங்கள் இரண்டு பேரும் எடுத்த முடிவு. விரைவில் ஊர் அறிய திருமணம் நடக்கும்,” என்று கார்த்தி கூறியுள்ளார்.

Loading...
Load next