‘கொஞ்சம் கொஞ்சம்’

புதுமுக நடிகர் கோகுல் நாயக னாக நடிக்கும் படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’. இவருக்கு ஜோடியாக பம்பாய் நடிகை நீனு நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் உதய்சங்கரன். “தமிழ் நாட்டிலிருந்து கேரளா வுக்குச் சென்று இரும்புக் கடைகள் வைத்து வாழ்க்கையில் முன்னேறும் இளைஞராக அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு மனைவி யாக மதுமிதாவும், காதலியாக சின்னத்திரையில் நடிக்கும் சர்மிளா தாபாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் கேரளாவைச் சேர்ந்த பிரியா, மோஹன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

“கே.வி. ஆனந்த், ‘காக்கா முட்டை’ மணிகண்டனிடம் பணியாற்றிய பி.ஆர்.நிக்கி கண் ணன் இப்படத்தின் ஒளிப்பதி வாளர். அருண்பாரதி, தேன் மொழிதாஸ், மீனாட்சிசுந்தரம், ஹசீனா எஸ்.கானம் பாடல் வரிகளில், வல்லவன் இசைய மைப்பில் பாடல்கள் உருவாகி உள்ளன. “அனைத்துக் கட்டப் படப்பிடிப்பும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள முக்கியப் பகுதிகளில் நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். “வித்தியாசமான திரைக் கதையுடன், காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் கலந்து அனைவரையும் கவரக்கூடிய ஜனரஞ்சகமான படமாக இதை உருவாக்கி வருகிறோம். “தமிழ்த் திரை ரசிகர்களின் ரசனை இன்று வெகுவாக மாறி விட்டது. நன்கு ரசிக்கும்படியான வித்தியாசமான முயற்சிகளைத் தயக்கமே இல்லாமல் வரவேற்று ஆதரவு வழங்குகிறார்கள்.

‘கொஞ்சம் கொஞ்சம்’ படத்தில் கோகுல், நீனு.

Loading...
Load next