‘தரமான படங்களே என் குறிக்கோள்’

­­­விக்­ரம் 2 வேடங்களில் நடித்து அண்மை­யில் திரைக்கு வந்த ‘இரு­மு­கன்’ படத்­தின் வெற்றி விழாவில் பேசிய அவர் தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதே தன் குறிக்­கோள் என்றார். படம் பற்றி மேலும் பேசிய அவர், “இருமுகன் படம் வசூல் சாதனை­யு­டன் வெற்­றிக­ர­மாக ஓடிக்­கொண்­டி­ருக்­கிறது. இந்த வெற்றி எனக்கு மட்­டு­மல்ல. படக்­கு­ழு­வி­னர் அனை­வரை­யும் சேரும். “ஒரு படத்­துக்­கும் இன்னொரு படத்­துக்­கும் நான் நீண்ட இடைவெளி எடுத்­துக் கொள்­கி­றேன் என்று சிலர் ஆதங்கப்­படு­கிறார்­கள். “எனக்­குப் பட எண்­ணிக்கை முக்­கி­ய­மல்ல. தரமான படங்களைக் கொடுக்க வேண்டும் என்பதே என் குறிக்­கோள்.

“ஒரு நடி­க­ருக்கு முகவரி கொடுப்­பது, அவர் நடிக்­கும் கதா­பாத்­தி­ரங்களும் அவர் நடித்­துத் திரைக்கு வந்த கடைசி பட­மும்­தான். இருமுகன் எனக்கு அப்படி ஒரு படமாக அமைந்து இருக்­கிறது,” என்று விக்ரம் பேசினார். விழாவில் இயக்­கு­நர் ஆனந்த் ஷங்கர், பட அதிபர் சிபு தமீன்ஸ், உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார் ­கள். இதற்கிடையே, விக்ரமின் மகன் துரு­வா­வும் அவரைப் போலவே சினிமா மீது ரசனை கொண்ட­வ­ராக இருக்­கிறார். லண்ட­னில் 6 மாதமாக சினிமா பற்றிப் படித்­து­வந்த இவர் முதன்­மு­த­லாக ஒரு குறும்ப­டத்­திற்கு கதை எழுதி, இயக்­கி­ உள்­ளார். அந்தக் குறும்ப­டத்தை அதி­கா­ர­பூர்­வ­மாகத் தன்­னுடைய யூடி­யூப்­பில் வெளி­யிட்­டுள்­ளார் துருவ். ‘குட்நைட் சார்லி’ என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்தக் குறும்ப­டம் சமூக வலை­த்த­ளங்களில் நல்ல வர­வேற்பைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

Loading...
Load next