சூர்யா அதிரடி: தெலுங்கு ரசிகர்களுக்கு அதிக இடம்

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எந்தப் படங்களும் தமிழ் ரசிகர்களிடையே பெருமள வில் வெற்றி பெறவில்லை. இதனால், தன் அடுத்த 'சிங்கம் 3' படத்தை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கடுமையாக உழைத்து வருகிறார். சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான '24' படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் தமிழில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், தெலுங்கில் நிலைமை அப்படியே தலைகீழ். படம் மாபெரும் வசூல் சாதனைப் படைத்தது. சூர்யா கடைசியாக நடித்த 'அஞ்சான்', 'மாஸ்', '24' மூன்றுமே தமிழில் பெரிதும் வெற்றியடையாத படங்கள் தெலுங்கில் வெற்றிப் பெற்றன.

எனவே, 'சிங்கம் 3' படத்தை தமிழைவிடத் தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வெளியிட சூர்யா முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏனெனில் படத்திற்குப் படம் சூர்யாவிற்கு தெலுங்கில் வரவேற்பு உயர்ந்து கொண்டே இருக்கின்றது. சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா, சூர்யாவுக்கு ஏகப்பட்ட தெலுங்கு ரசிகர்கள் உண்டு என்றார். "சூர்யாவின் படம் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்-டு வருகிறது என்றால் தெலுங்கு கதாநாயகர்கள் பயந்துபோய் தங்கள் படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பார்கள். அந்தளவுக்கு ஆந்திரா, தெலுங்கானாவில் அவருக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது," என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் ரசிகர்கள் கைவிட்டாலும் சூர்யாவைத் தாங்கிப்பிடிக்க தெலுங்கு ரசிகர்கள் தயாராக வுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!