விஷாலைத் திட்டித் தீர்த்த வரலட்சுமி

நடிகர் விஷாலும் நடிகை வர­லட்­சு­மி­யும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் காத­லித்து வருவது ஊர­றிந்த விஷயமே. ஆனால், நடிகை வர­லட்­சு­மி­யின் தந்தை சரத்குமா­ருக்­கும் விஷா­லுக்­கும் நாளுக்கு நாள் மோதல் பெரி­தா­கிக் கொண்டே இருக்­கிறது. இந்­நிலை­யில், நடிகர் சங்கப் பொதுச்­செ­ய­லா­ள­ராக இருக்­கும் விஷால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சங்கத்­தில் இருந்து சரத்­கு­மார், ராதாரவி, வாகை சந்­தி­ர­சே­கர் ஆகியோரை அதி­ர­டி­யாக நீக்­கினார்.

இதனை அறிந்த திரை­யு­ல­கமே அதிர்ச்­சி­யடைந்தது. சரத்­கு­மா­ரின் மனைவி ராதிகா டுவிட்­ட­ரில் விஷாலைச் ‘சூனி­யக்­கா­ரன்’ எனத் திட்­டினார். சரத்­கு­மாரோ இதனால் மிகவும் மன­முடைந்து காணப்­பட்­டார். ­­­முறை­கேடு செய்­த­தாக ஆதா­ர­மில்­லா­மல் குற்றம் சாட்­டு­வ­தா­க­வும் நடிகர் சங்கத்­தில் இருந்து நீக்­கி­யதை எதிர்த்து நீதி­மன்றத்­தில் வழக்­குத் தொட­ரு­வேன் என்றும் சரத்­கு­மார் கூறினார். “நடிகர் சங்கத்­தில் இருந்து என்னை­யும் ராதாரவி, வாகை சந்­தி­ர­சே­கர் போன்­றோரை­யும் தற்­கா­லி­க­மாக நீக்கம் செய்து சங்கத்­தின் செயற்­கு­ழு­வில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­தாக அறி­விப்பு வெளி­யிட்­டுள்­ள­னர்.

“இது ­சம்பந்த­மான அறிவிப்பு எதுவும் இதுவரை எனக்கு வர­வில்லை. தற்­போதைய நிர்­வா­கிகள் தொடர்ந்து என் மீது காழ்ப்­பு­ணர்ச்­சி­யோடு நடப்­ப­தும் அவதூறு பரப்பி எனது பெய­ருக்­குக் களங்கம் விளை­விப்­ப­து­மாக இருக்­கிறார்­கள்,” என்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் குறிப்­பிட்­டி­ருந்தார். இதனை­யெல்­லாம் கூர்ந்து கவ­னித்த வர­லட்­சுமி, தந்தை­யின் வருத்­தத்தைப் பொறுக்கமுடி­யா­மல் தவித்­த­தாகக் கூறப்­படு­கிறது. இதனால் கோப­மடைந்து வரலட்­சுமி விஷாலைக் கடுமை­யான வார்த்தை­களில் திட்­டி­ய­தாகச் சமூக வலைத்­த­ளங்களில் செய்­தி­கள் பரவி வரு­கின்றன.

தந்தை சரத்குமாருக்கு எதிராக விஷால் செயல்பட்டதால் அவரைத் திட்டியுள்ளார் வரலட்சுமி. படம்: இணையம்

Loading...
Load next