‘கடவுள் இருக்கான் குமாரு’

படம் பார்க்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரையும் சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கடிக்க செய்யும் இயக்குநர்கள் எனப் பெயர் பெற்றவர்கள் வெங்கட் பிரபு, ராஜேஷ். வெங்கட் பிரபு சென்னை 28 இரண்டாம் பாகத்தையும், ராஜேஷ் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தையும் தற்போது இயக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு திரைப்படத்திற்காகக் கூட்டணி அமைத்தால் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது. அப்படி ஒரு திரைப்படமாக அமைய இருக்கிறது ராஜே‌ஷின் கதையில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படம். இந்தத் தகவல் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற ‘டூப்பாடூ ஆப்’ வெளியீட்டு விழாவில் அதிகாரப் பூர்வமாக வெங்கட் பிரபுவால் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

“எங்கள் நிறுவனத்திற்கு இது ஒரு பெருமையான தருணம். எங்கள் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் 25ஆம் ஆண்டை முன்னிட்டு இதுவரை ரசிகர்கள் எங்கள் நிறுவனத்திற்கு அளித்து வரும் ஆதரவு, எங்கள் மீதான அவர்களின் நம்பிக்கைக்கு நன்றி சொல்லும் விதத்தில் இந்த பிரமாண்ட கூட்டணியை அமைத் துள்ளோம். “நகைச்சுவைப் படங்களை உருவாக்குவதில் ஜாம்பவான் களாகத் திகழும் வெங்கட் பிரபு, ராஜேஷ் ஆகியோர் இணைந்து இயக்கும் இந்தப் படத்தைத் தயாரிப்பதில் நாங்கள் எல்லை யற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்.

Loading...
Load next