நாங்கள் பிரியவில்லை: பாபி சிம்ஹா விளக்கம்

கோடம்பாக்கத்தில் தற்போது விவாகரத்து குறித்தான செய்திகள்தான் அதிகமாக வெளியாகின்றன. அமலாபால் தனது காதல் கணவர் ஏ.எல்.விஜய்யைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. பிரபல நடிகை லிசி, இயக்குநர் பிரியதர்ஷன் விவாகரத்து வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்திகள் வெளி யாகியுள்ளது.

இப்படி தொடர்ந்து கோலி வுட்டில் அடுத்தடுத்து விவாகரத்து சம்பவங்கள் நடைபெற்று வருகிற நிலையில், அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்ட பாபி சிம்ஹாவும் நடிகை ரேஷ்மி மேனனும் பிரிந்துவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் செய்திகள் தொடர்ந்து பரவியுள்ளன. இந்நிலையில், பாபி சிம்ஹா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் தன்னைப் பற்றிய செய்தி வெறும் வதந்தி என்றும் அது குறித்துத் தாம் கருத்து கூற விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். “எங்களைப் பற்றி வெளிவந்த செய்திகளை நினைத்து கவலைப் பட்டு எங்களைத் தொலைபேசியில் அழைப்பவர்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். “நாங்கள் மகிழ்ச்சியாக உள் ளோம். எங்கள் இல்லறம் இனி மையாக நடந்து வருகிறது. எங்களுக்கு எதிராக செயல்படும் யாரோ ஒருவர்தான் இந்த வதந்தியைப் பரப்பி உள்ளார். “வதந்திகளால் வீண் சிக்கல் கள் முளைக்கும். எனவே இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். “நாங்கள் தற்போது பிரிப்பது பீட்சாவை மட்டும்தான்,” என்று பாபி சிம்ஹா விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் பாபி சிம்ஹா, நடிகை ரேஷ்மி மேனன்.

Loading...
Load next