கடினமான நடனப் பயிற்சியில் பூஜா

‘முகமூடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் இவரைக் காண முடியாவிட்டாலும், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருகிறார். திரையுலகுக்கு வந்து 4 வருடங்கள் ஆகியும் 4 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறார். கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருந்தும் வாய்ப்புகள் தடைபட்டு வருவதாக நொந்து கொள்கிறார் பூஜா. புதிய முயற்சிகள்தான் அடையாளம் காட்டும் என்று தோழிகள் அறிவுரை கூற, அதற்காக காத்திருந்தாராம்.

இந்நிலையில், அல்லு அர்ஜுன் ஜோடியாக ‘துவ்வடா ஜகன்னாதம்’ தெலுங்குப் படத்தில் அந்தரத்தில் தொங்கியபடி நடனம் ஆடும் பாடல் காட்சியில் நடிக்கக் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டுள்ளார். அக்ரோபாட்டிக் நடன வகையைச் சேர்ந்த ‘ஏரியல் சில்க்’ என்ற புதுவகைப் பயிற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார் பூஜா. மேல்தளத்திலிருந்து தொங்கும் கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு வேறு எந்தவித உதவியும் இன்றி, உடல் எடையை சமாளித்து ஆடும் கடினமான நடனப் பயிற்சி இது. இந்தப் பாடல் இது தன்னைப் பற்றி ரசிகர்களைப் பேச வைக்கும் என உறுதியாக நம்புகிறாராம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமிழில் வெளியாகும் சில படங்கள் தம்மைப் பிரமிக்க வைப்பதாகக் கூறுகிறார் க‌ஷ்மீரா. படம்: ஊடகம்

13 Nov 2019

கஷ்மீரா: தமிழ் சினிமாவில் அன்பு பாராட்டுகிறார்கள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்