சுடச் சுடச் செய்திகள்

முஜிபூர்: மனித உறவுகளின் மகத்துவத்தைச் சொல்லும் படம்

நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் நன்கு அறியப்பட்டவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர். தனது தயாரிப்பு நிறுவனம் சாகியா செல்லுலாய்ட்ஸ் மூலம் ‘தப்பாட்டம்’ எனும் படத்தை தயாரிக்கின்றார் ரித்தீஷ். இது இவரது நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். புதுமுகம் துரை சுதாகர் நாய கனாகவும் டோனா ரோசாரியோ நாயகியாகவும் நடிக்கிறார்கள். பிரபல இயக்குநர்கள் மகேந்திரன், பிரியதர் ஷன் ஆகியோரிடம் உதவி இயக்கு நராகப் பணியாற்றியவரும் ‘இரு நதிகள்’ படத்தை இயக்கியவருமான முஜிபூர் இப்படத்தை இயக்குகிறார்.

“ஒரு தப்படிக்கும் கலைஞனுக்கும் ஒப்பாரி வைக்கும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. திருமணமும் செய்துகொள்கின்றனர். இருவரும் ஊரே மெச்சும் சிறந்த தம்பதியாக வாழ்கின்றனர். “இவர்களின் வாழ்க்கையில் எதிர் பாராவிதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்து இவர்களது உறவில் பிளவை ஏற்ப டுத்துகிறது. இருவரும் பிரச்சினை களைக் கடந்து மீண்டு வந்தார்களா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் உருவாக்கி இருக்கிறோம். “நாயகனாக நடிக்கும் சுதாகர், தப்பாட்ட கலைஞர் கதாபாத்திரத்திற் காக நாற்பது நாட்கள் சிறப்பு பயிற் சியை மேற்கொண்டு நடித்துள்ளார். மனித உறவுகளின் மகத்துவத்தையும், உண்மையையும் இப்படம் ஆணித்தர மாக எடுத்துச்சொல்லும். இக்கதை ஓர் உண்மை சம்பவத்தை அடிப் படையாக வைத்து உருவாக்கப்பட் டுள்ளது.

‘தப்பாட்டம்’ படத்தில் துரை சுதாகர், ரோசாரியோ.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon