‘ரசிகர்கள் வேண்டாம் என்று சொல்லும் வரை நடிப்பேன்’

காதலர் பற்றியும் திருமணம் பற்றியும் வந்த பலவிதமான செய்திகள் அனைத்தும் உண்மைதான் என்று கூறியுள்ளார் நடிமை சமந்தா. அதேசமயம், தனது திருமணம் இந்த ஆண்டு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனது காதலன் யார் என்பதை உறுதி செய்த சமந்தா, “நான் காதலிப்பவர் யார் என்பதை அறிய பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். நடிகர் நாகசைதன்யாவைத்தான் காதலிக்கி றேன். இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. எங்கள் பெற்றோர்களின் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு இருக் கிறது. குடும்பத்தினர் திருமண தேதியை முடிவு செய்து அறிவிப்பார்கள். “தெலுங்கில் நான் முதல் படத்தில் அறிமுகமான நாளில் இருந்தே நாகசைதன்யா நெருக்கமான வராகிவிட்டார். மூன்று மாதங்களுக்கு முன்பு தான் காதல் விவகாரம் எங்கள் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

“ஆனால், திருமணத்துக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. இந்த ஆண்டில் திரு மணம் செய்து கொள்ளப்போவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. “எட்டு ஆண்டுகளாக சினிமாவில் இருக்கி றேன். சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது. திருமணத்துக்குப் பிறகு சினிமாவைவிட்டு விலகுவது பற்றி சிந்திக்கவே இல்லை. நாக சைதன்யாவும் தொடர்ந்து நான் சினிமாவில் நடிப்பதையே விரும்புகிறார். “சினிமாவை நேசிக்கும் ஒரு குடும்பத் திற்கே மருமகளாக செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்துக்குப் பிறகு ரசிகர் கள் என்னை எப்படி ஏற்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் என்னை வேண் டாம் என்று சொல்லும்வரை நடித்துக் கொண்டே இருப்பேன்,” என்று கூறினார் அவர்.

நாகசைதன்யாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் என்ன என்று கேட்டபோது, “நாகசைதன்யாவிடம் நிறைய பிடித்த விஷயங்கள் இருக்கின்றன. “குழப்பமாக இருந்த என் வாழ்க்கையை மாற்றி ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வந்தது அவர்தான். “ஒரு படகுக்குத் துடுப்பு எப்படி முக்கியமோ அதுமாதிரி என் வாழ்க்கை யின் முக்கியமானவராகிவிட்டார் அவர்,” என்றார் சமந்தா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படம்: ஊடகம்

17 Nov 2019

புதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’

விக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம்

17 Nov 2019

‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்

நயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

17 Nov 2019

நயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி