‘இனிமேல் பாடமாட்டேன்’

தனது கொஞ்சும் குரலால் தமிழ், மலை­யா­ளம், தெலுங்கு, ஒரியா எனப் பலமொழி மக்­களைக் கவர்ந்த பின்னணி பாடகி எஸ்.ஜானகி (படம்) அவர்கள் பாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிட்­டத்­தட்ட அறுபது ஆண்­டு­கள் 48,000 பாடல்­கள், 4 தேசிய விரு­து­கள், 32 மாநில விரு­து­கள் என அவரது இசைப் பயணம் மிகவும் நெடியது. 1957ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘விதியின் விளை­யாட்டு’ படம் ஜான­கியைப் பாட­கி ­யாகத் திரையில் அறி­மு­கப்­படுத்­தி­யது. அதே­ ஆண்­டில் அவர் மலை­யா­ளம், தெலுங்கு படங் களி­லும் பாட­கி­யாக அறி­மு­க­ம் ஆனார். 78 வயதை எட்டியுள்ள ஜானகி, மலை­யா­ளத்­தில் தயா­ரா­கும் ‘10 கல்­பனை­கள்’ (10 கட்­ டளை­கள்) படத்­தில் இடம்­பெ­றும் ‘அம்மா பூவினு’ என்று தொடங்­கும் பாடலே தன்­னுடைய கடைசிப் பாடலாக இருக்­கும் என்றும் இனி மேல் படங்களி­லும் மேடை­களி­லும் பாடப் போவ­தில்லை என்றும் கூறியுள்ள அவர், தனது பாடகி வாழ்­வுக்கு முழுமை­யான ஓய்வை அறி­வித்­துள்­ளார். ஜான­கி­யின் கடைசிப் பாட­லுக்கு இசை­யமைக்­கும் பேறு, மிதுன் ஈஸ்­வ­ருக்­குக் கிடைத்­து உள்­ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கௌதம் கார்த்திக் அண்மையில் தேனி மாவட்டத்துக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார். பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்குச் சென்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். படம்: ஊடகம்

15 Nov 2019

கௌதமை நெகிழவைத்த ஆதரவற்ற குழந்தைகள்

‘சங்கத்தமிழன்’ காட்சியில் விஜய் சேதுபதி, ராஷி கன்னா. படம்: ஊடகம்

15 Nov 2019

நிவேதா: சங்கத் தமிழன் திருப்புமுனையை ஏற்படுத்தும்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் திருமணத்திற்கு தயாராகிவரும் அதேவேளையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் தனது குடும்பத்தினருடன் தலையில் மலர்க்கூடையை சுமந்து சென்று சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளார். 

15 Nov 2019

தர்காவில் காஜல் பிரார்த்தனை