‘ரெமோ’ வெளியீட்டிற்கு காத்து கிடக்கும் ரஜினி, அஜித் ரசிகர்கள்

தமிழ் சினி­மா­வில் அசுர வளர்ச்சி அடைந்த ­­­சி­வ­கார்த்திகேயனின் நடிப்­பில் விரைவில் வெளிவர இ­ருக்­கும் படம் ‘ரெமோ’. இப்­ப­டத்­தின் முன்­னோட்டக் காட்சி அண்மை­யில் வெளி யானது. சமூ­க­வலைத்­த­ளத்­தில் பெரும் வர­வேற்பைப் பெற்­றுள்ள இந்த முன்­னோட்ட காட்சியைத் தற்போது வரை 37 லட்சம் பேர் பார்வை­யிட்­டு உள்­ள­னர். அது­மட்­டு­மின்றி 61 ஆயிரம் பேர் ‘லைக்ஸ்’ என்ற தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் சிம்பு, தனுஷ் ஆகி­யோ­ரின் டீசர், முன்னோட்டக் காட்சிகள் பெற்ற ‘லைக்ஸை’ விட ‘ரெமோ’ அதிக ‘லைக்ஸ்’ பெற்று சாதனைப் படைத்­து உள்­ளது. மேலும் இந்த முன்­னோட்­டக் காட்­சி­யில் ரஜினி, அஜித் நட்­சத்­தி­ரங்களின் வச­னங்கள் அதிகம் உள்ளன.

முன்­னோட்­டத்­தின் முதல் காட்­சி­யி­லேயே ‘நம்ம தலை­வ­ரோட பேனர் மாதிரி இதே சத்யம் திரை­ய­ரங்கத்­தில் பெரிய பேனர் வரணும்’ என்று ரஜி­னியைக் குறிப்­பி­டும் வச­ன­மும் ‘சும்மா தெறிக்க விடணும்’ என்ற அஜித் ரசி­கர்­களை கவர்ந்த வச­ன­மும் அவர் களைப் பெரிதும் ஈர்த்­துள்­ளன. இது­போன்ற வச­னங்கள் இருப்­ப­தால் ரஜினி, அஜித் ரசி­கர்­களும் தங்க­ளது நட்­சத்­திர நாய­க­னின் படத்தை எதிர்­பார்ப்­பது போல், சிவகார்த்­தி­கே­ய­னின் ‘ரெமோ’ பட வெளி­யீட்­டிற்­காக காத்துக் கிடக்கின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்