அஜித் பட வாய்ப்பை நழுவ விட்டு வருந்தும் அனுஷ்கா!

அஜித், காஜல் அகர்வால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் முதலில் அஜித்துடன் இணைந்து நடிக்கப்போவதாகப் பேசப்பட்டவர் அனுஷ்கா. படம் முழுக்க வெளிநாடுகளில் நடப்பதால் மொத்தமாக நாற்பது நாட்கள் கால்‌ஷீட் கேட்டார்கள். பாகுபலி உட்பட மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அனுஷ்காவால் அத்தனை தேதி களையும் மொத்தமாகத் தரமுடிய வில்லை. இதனால் அனுஷ்கா விலகிக்கொள்ள காஜல் உள்ளே புகுந்துவிட்டார். அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டோமே என்ற வருத்தத்தில் போவோர் வருவோரிடம் எல்லாம் புலம்பித் தள்ளுகிறாராம் அனுஷ்கா.

Loading...
Load next