‘ரெமோ’வுக்கு பலத்த வரவேற்பு

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ ஆயுத பூசைக்குத் திரைக்கு வருகிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் மாபெரும் செலவில் உரு வாகியிருக்கும் படம் இது என்பதால், ஆயிரக் கணக்கான திரையரங்குகளில் வெளியிட்டு ஒரே வாரத்தில் போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர் விநியோகிப்பாளர்கள். மேலும், ‘ரெமோ’ படத்தின் முன்னோட்டக் காட்சி லட்சக்கணக்கான ரசிகர் களின் வரவேற்பைப் பெற்றுள்ளதாம். அதனால் படம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிக வசூலை அள்ளும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளதாம். ‘ரெமோ’ பட முன்னோட்டக் காட்சியைக் கிட்டத்தட்ட 45 லட்சத் திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர்.

முன்னோட்டக்காட்சியைப் பார்த்த விஜய்சேதுபதி, உடனே சிவகார்த்தி கேயனைத் தொடர்புகொண்டு ‘நீங்க சூப்பர் பிகர் சார்’ என்று கிண்டல் செய்தாராம். சிவகார்த்திகேயனின் தொழில்முறை போட்டியாளர் என்று வெளியில் பேசப்படுபவர் விஜய் சேதுபதி. ஆனால் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ‘ரெமோ’ படத்தில் வரும் சிவகார்த்திகேயன், படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷை காட்டிலும் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. கவர்ச்சியாகவோ, முத்தக்காட்சிகளிலோ நடிக்கவே மாட்டேன் என்பதை தனது கொள்கையாகக் கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்திலும் அவரது கொள்கையைக் கடைப்பிடித்து நடித்துள்ளார். இருப்பினும் அனைத்து உணர்வுகளையும் கண்களிலும் முகத்திலும் வெளிக்கொணர முடியும் என்பதையும் அவர் நிரூபித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கதிர் நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜடா’. இவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படம்: ஊடகம்

17 Nov 2019

புதிய அனுபவத்தை தர வருகிறது ‘ஜடா’

விக்ரம் மகன் துருவ், பனித்தா சந்து. படம்: ஊடகம்

17 Nov 2019

‘ஆதித்ய வர்மா’வுக்கு ‘ஏ’ சான்றிதழ்

நயன்தாராவின் தீவிர ரசிகை என்கிறார் ரகுல் பிரீத்சிங்.

17 Nov 2019

நயன்தாராவைப் பாராட்டும் இளம் நாயகி