நடிப்பில் அசத்திய ஜோதிகா

‘குற்றம் கடிதல்’ படத்தில் நடிகை ஜோதிகா மூத்த நடிகைகள் பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் இருவருடனும் போட்டிபோட்டு நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ‘36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு ‘குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் வேடமாம். இதில் துணிச்சலான பெண்ணாக நடிப்பதற்காகவே, மனைவி ஜோதிகாவுக்கு கணவர் சூர்யா அண்மையில் இருசக்கர வாகனம் ஓட்ட பயிற்சி அளித்தார். இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் அனுபவ நடிகைகள் பானுப்பிரியா, சரண்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். அவர்களும் தைரியம் மிகுந்த பெண்களாகவே இதில் வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் போட்டி போட்டு நடிப்பதால் இது ரசிகர்களால் பேசப்படும் படமாக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வழி கலந்துரையாடிய நடிகை நிவேதா தாமஸ் தற்போது அதற்காக வருந்துவதாகத் தகவல். படம்: ஊடகம்

13 Nov 2019

கண்ணியம் தேவை: நிவேதா கோபம்

படப்பிடிப்பின்போது சக நடிகையை அடிக்க நேர்ந்ததற்காக மன்னிப்புக் கோரியுள்ளார் நடிகர் விஷால். 

13 Nov 2019

மன்னிப்பு கோரிய விஷால்