‘அது ஒரு பொற்காலம்’ தாத்தா, அப்பா பற்றி விக்ரம் பிரபு

“தாத்தா, அப்பா காலங்கள் தமிழ்ச் சினிமாவின் பொற்காலம்.” குடும்ப வாழ்க்கை குறித்து? “திரைப்படங்களில் நடிக்கும் நேரம் போக ஓய்வு நேரங்களில் என் குடும்பத்தாருடன் இருக்கவே விரும்புகிறேன். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் எனது குடும்பத்தாருடனேயே இருப்பேன். கைபேசியைக்கூட அணைத்துவிடுவேன். “உங்களுக்கே தெரியும்... எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். கூட்டுக் குடும்பம் என்பதால் ஒருவரை ஒருவர் பார்க்காமல் பேசாமல் இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். என் தாத்தாவுக்கு அப்பாவுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே மாதிரி என் அப்பாவுக்கு எங்களுடன் நேரம் செலவிட முடியவில்லை. பேரக் குழந்தைகளுடன் பேசி மகிழ்கிறார்.

“எனக்கும் அதே நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஞாயிற்றுக்கிழமை களில் விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்தாருடன் திரையரங்கம், உணவகம் போன்ற இடங்களுக்குச் செல்வது மிகவும் பிடித்திருக்கிறது,” என்கிறார் விக்ரம் பிரபு.

Loading...
Load next